மீண்டும் அவமதிக்கப்பட்டேன்: சுரேஷ் தாத்தாவின் வருத்தமான பதிவு!
Send us your feedback to audioarticles@vaarta.com
பிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் திங்கள் முதல் எவிக்ட் ஆன போட்டியாளர்கள் ரீஎன்ட்ரி ஆகி கொண்டிருக்கும் நிலையில் இன்னும் ஷிவானி மட்டுமே உள்ளே செல்ல வேண்டிய நிலை உள்ளது.
இந்த நிலையில் இந்த வாரத்தின் முதல் நாளில் இருந்தே சுரேஷ் தாத்தா உள்ளே வருவார் என்று அவரது ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்த நிலையில் ’தனக்கு அழைப்பு வரவில்லை’ என்றும் ’அழைப்பு வந்தால் கண்டிப்பாக செல்வேன்’ என்றும் சுரேஷ் தனது சமூக வலைத்தளத்தில் கூறிவந்தார்.
இந்த நிலையில் நேற்று பிக்பாஸ் வீட்டிற்கு செல்ல வாய்ப்பு உள்ளதாகவும் நல்ல அறிகுறி தெரிகிறது என்றும் கூறிய சுரேஷ், இன்று காலை, ‘ஒண்ணுமே புரியலே உலகத்திலே என்னமோ நடக்குது’ என்ற பாடலை பதிவு செய்து மீண்டும் அதிர்ச்சிக்குள்ளாக்கினார்.
இந்த நிலையில் சற்று முன்னர் அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் ’மீண்டும் அவமதிக்கப்பட்டேன்’ என்று பதிவு செய்திருப்பதை அடுத்து அவர் பிக்பாஸ் வீட்டிற்கு செல்ல வாய்ப்பு இல்லை என்றே கூறப்படுகிறது.
கடந்த சீசனிலும் ஒரு சிலரை ஒதுக்கி வைத்தது போல் இந்த சீசனில் சுரேஷை பிக்பாஸ் குழுவினர் ஒதுக்கி வைத்து விட்டார்களோ என்று எண்ணத் தோன்றுகிறது. ஆனால் அதே நேரத்தில் ஒதுக்கி வைக்கும் அளவுக்கு சுரேஷ் எந்த தவறையும் செய்யவில்லையே என்றும் அவரது ஆர்மியினர் கேள்விகளை எழுப்பி வருகின்றனர். இது குறித்து சுரேஷ் சக்ரவர்த்தி மேலும் என்ன சொல்வார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
Insulted again
— Suresh Chakravarthy (@susrisu) January 13, 2021
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com