உங்களுக்கும் பெட்டிக்கும் ஒரு ராசி இருக்கு... பிக்பாஸ் கலாய்த்தது யாரை?

  • IndiaGlitz, [Saturday,January 21 2023]

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு விருந்தினராக வந்த ஒருவரை உங்களுக்கும் பெட்டிக்கும் ஒரு ராசி இருக்கு என பிக் பாஸ் கலாய்த்த வீடியோ தற்போது இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இறுதிக்கட்டம் வந்துள்ள நிலையில் கடந்து சில நாட்களாக சிறப்பு விருந்தினர்கள் பிக் பாஸ் வீட்டிற்கு வந்து கொண்டிருக்கின்றனர் என்பதை பார்த்து வருகிறோம்.

அந்த வகையில் சற்று முன் வெளியான புரமோ வீடியோவில் பிக்பாஸ் மூன்றாவது சீசனின் போட்டியாளர்களில் ஒருவரான கவின் வந்துள்ளார். தனது ’டாடா’ படத்தின் புரமோஷனுக்காக வந்துள்ள அவரை வரவேற்ற பிக் பாஸ், ‘உங்களுக்கும் பெட்டிக்கும் என்ன ராசியோ தெரியவில்லை, நேற்று பெட்டி போச்சு, இன்னிக்கு நீங்கள் வந்திருக்கிறீர்கள்’ என்று கலாய்த்தார்.

கவின் உள்பட போட்டியாளர்கள் அனைவரும் பிக் பாஸின் நகைச்சுவை ரசித்து கைதட்டினார்கள். பிக்பாஸ் சீசன் 3 போட்டியாளரான கவின், பணப்பெட்டியை எடுத்து கொண்டு வெளியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இறுதி போட்டியாளர்களான விக்ரமன், ஷிவின், அசீம் ஆகிய மூன்று பேருக்கும் கவின் வாழ்த்து தெரிவித்து ’நன்றாக ஜாலியாக இருங்கள், வெளியே வரும் போது ஜாலியாக வாருங்கள் என்று அறிவுரை கூறினார். இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.