பிக்பாஸ் ஆடுகளத்தை சமப்படுத்த வேண்டியது நம் கடமை: கமல்
Send us your feedback to audioarticles@vaarta.com
பிக்பாஸ் நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை நெருங்கிவிட்ட நிலையில் நிகழ்ச்சி தற்போது சுவாரஸ்யமாகவும் விறுவிறுப்பாகவும் சென்று கொண்டிருக்கின்றது. அதிலும் இன்று சனிக்கிழமை என்பதால் நிகழ்ச்சியை கமல்ஹாசன் கூடுதல் விறுவிறுப்பாக கொண்டு செல்வார்
இந்த நிலையில் சற்றுமுன் வெளியான புரமோ வீடியோவில், 'ஆடுகளம் சமதளமா இருக்கணும்! அப்பதான் விளையாட்டு சுவாரஸ்யமாவும் நேர்மையாவும் இருக்கும். ஆடுகளத்தை சமமாக ஆக்கவேண்டியது உங்கள் கடமை, என் கடமையும் கூட' என வழக்கம்போல் புரியாத புதிராக கமல் கூறியுள்ளார்.
இன்று வெளியேறும் போட்டியாளர் யார்? என்பதை அறிவிக்க வாய்ப்பு இல்லை என்றாலும் இன்று எவிக்சன் பட்டியலில் உள்ள ஒருவர் காப்பாற்றப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த நபர் ஐஸ்வர்யாவாக இருக்க கூடாது என்று பொதுமக்கள் விரும்புகின்றனர். பொதுமக்களின் விருப்பத்தை இதுவரை நிறைவேற்றாத பிக்பாஸ் இன்றாவது நிறைவேற்றுவாரா?
ஆடுகளம் சமதளமா இருக்கணும்!
— Vijay Television (@vijaytelevision) September 15, 2018
அப்பதான் விளையாட்டு சுவாரஸ்யமாவும் நேர்மையாவும் இருக்கும்! ???? #பிக்பாஸ் - இன்று இரவு 9 மணிக்கு உங்கள் விஜயில்.. #BiggBossTamil @ikamalhaasan #VivoBiggBoss @Vivo_India pic.twitter.com/UU9Jq9b8W1
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments