நித்யாவை தனிமைப்படுத்திய பிக்பாஸ் போட்டியாளர்கள்

  • IndiaGlitz, [Friday,June 22 2018]

பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கி ஐந்து நாட்கள் முடிந்த பின்னரும் இன்னும் சூடுபிடிக்காத நிலையில் தான் உள்ளது. போட்டியாளர்களுக்குள் ஏதாவது சண்டை வந்தால்தான் பார்வையாளர்களுக்கு சுவாரஸ்யமாக இருக்கும். ஆனால் இந்த நிகழ்ச்சியின் இயக்குனர் என்னதான் சண்டையை ஆரம்பித்து வைத்தாலும் அது புஸ்வானமாகி வருவதால் நிகழ்ச்சியின் சுவாரஸ்யம் குறைந்து கொண்டே வருவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் இன்றைய புரமோ வீடியோ மூலம் மீண்டும் மும்தாஜ், நித்யா மோதிக்கொள்வதாக தெரிகிறது. வெங்காயத்தில் ஆரம்பித்த சண்டையை மனதில் வைத்து இன்னும் இருவரும் எதிரும் புதிருமாகவே உள்ளனர்.

இந்த நிலையில் சற்றுமுன் வெளிவந்த மூன்றாவது புரமோ வீடியோவில் நித்யா தனிமையில் சோகமாக படுத்துள்ளார். அவரை பற்றி மற்ற போட்டியாளர்கள் விவாதித்து வருகின்றனர். குறிப்பாக வைஷ்ணவி, 'நித்யா ஒருவர் தான் இந்த வீட்டில் செலிபிரிட்டி இல்லை என்று தூபம் போடுகிறார்.

இந்த நிகழ்ச்சி பிக்பாஸ் நிகழ்ச்சியா? அல்லது சொல்வதெல்லாம் உண்மை' நிகழ்ச்சியா? என்று கூறும் அளவிற்கு பாலாஜி-நித்யா சண்டையே பிரதானமாக இருப்பதாக் நெட்டிசன்கள் கமெண்டுகளில் தெரிவித்து வருகின்றனர்.

More News

திருவள்ளூரில் ஒரு ரியல் 'சாட்டை' சமுத்திரக்கனி: ஒரு நெகிழ்ச்சி சம்பவம்

சமுத்திரக்கனி நடித்து இயக்கிய 'சாட்டை' திரைப்படத்தில் வரும் ஒரு காட்சியை போல் பணிமாறுதல் பெற்ற ஆசிரியர் ஒருவருக்கு மாணவர்களின் எதிர்ப்பு காரணமாக பணிமாற்றம் நிறுத்தி

பிக்பாஸ் வீட்டில் லிப்கிஸ்: மீண்டும் ஒரு மருத்துவ முத்தமா?

பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சி தினமும் ஒளிபரப்பாகி நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில் சற்றுமுன் இன்றைய நிகழ்ச்சியின் புரமோ வீடியோ வெளிவந்துள்ளது.

தம்பிக்கு..பிறந்த நாள், தரணிக்கு சிறந்த நாள்: விஜய் பிறந்த நாள் கவிதை எழுதிய தாணு

தளபதி விஜய் நடித்த 'தெறி' உள்பட பல வெற்றி படங்களை தயாரித்த கலைப்புலி எஸ்.தாணு அவர்கள் இன்று விஜய்யின் பிறந்த நாளை முன்னிட்டு அவருக்கு கவிதை மூலம் தனது பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

இன்னும் சிலமணி நேரத்தில் 'சர்கார்' செகண்ட் லுக்: விஜய் ரசிகர்களுக்கு இரட்டை விருந்து

தளபதி விஜய் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவாகி வரும் விஜய்யின்

'சர்கார்' ஃபர்ஸ்ட்லுக் போஸ்டருக்கு அன்புமணி கண்டனம்

தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி வரும் திரைப்படத்தின் டைட்டில் 'சர்கார்' என்று சற்றுமுன் வெளியானது என்பதை ஏற்கனவே பார்த்தோம்.