பிக்பாஸ் ஃபினாலேவுக்கு டைட்டில் வின்னரே வரவில்லையா? சுரேஷ் சக்கரவர்த்தியின் நக்கல் டுவிட்
Send us your feedback to audioarticles@vaarta.com
பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த நூறு நாட்களுக்கு மேல் நடைபெற்ற நிலையில் நாளை இந்த நிகழ்ச்சியின் கிராண்ட் ஃபினாலே நடைபெற உள்ளது என்பதும் இறுதி போட்டியாளர்களாக தேர்வு செய்யப்பட்ட ஐவரில் ஒருவர் நாளை டைட்டில் பட்டமும் மற்றும் ரூபாய் 50 லட்சம் பரிசு பணத்தையும் பெற இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக இந்த சீசனின் இறுதிப்போட்டி நேரடியாக ஒளிபரப்பாகவில்லை என்றும் 5 வது சீசனில் இறுதி நிகழ்ச்சியின் படப்பிடிப்பு இன்றே நடைபெறுவதாகவும், அதன் பின்னர் நாளை ஒளிபரப்பாகும் என்றும் செய்திகள் வெளியாகி உள்ளது.
இந்த நிலையில் ஒவ்வொரு சீசனிலும் கிராண்ட் ஃபினாலே நடைபெறும்போது முந்தைய சீசன்களின் டைட்டில் வின்னர் கலந்து கொள்வது வழக்கமாக இருந்து வருகிறது. அந்த வகையில் இந்த சீசனில் கிராண்ட் ஃபினாலே நிகழ்ச்சியில் கடந்த சீசனில் டைட்டில் வின்னர் ஆரி வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் கிராண்ட் ஃபினாலேவில் பங்கு பெறவில்லை என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன.
இதுகுறித்து கடந்த சீசனில் போட்டியாளர்களில் ஒருவரான சுரேஷ் சக்கரவர்த்தி தனது ட்விட்டரில் நக்கலுடன் கூறியிருப்பதாவது:
என் மனைவி: டீ ஆறிப்போச்சு
நான்: ஆரியே போகல, டீ ஆறிப்போனா என்ன? ஆறாட்டி என்ன?
என பதிவு செய்துள்ளார். மேலும் இந்த சீசனின் கிராண்ட் ஃபினாலேவில் ஆரி கலந்து கொள்ளவில்லை என்பதை பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்து ரெகுலராக அப்டேட் செய்து வருபவர்களும் சமூக வலைத்தளங்களில் உறுதி செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
I know you guys were looking forward for me in the trophy hand over segment in this bb5 finale even I was excited to meet you guys and kamal sir again but unfortunately I wasn't invited for the show. @ikamalhaasan @vijaytelevision
— Aari Arujunan (@Aariarujunan) January 15, 2022
Enn manaivi: Tea Aaripochu
— Suresh Chakravarthy (@bbsureshthatha) January 15, 2022
Naan: Aaariye pogale tea aarina enna aaratti enna
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments