சூர்யா ரிலீஸ் செய்த பிக்பாஸ் டைட்டில் வின்னர் அறிமுகமாகும் படத்தின் டீசர்!
Send us your feedback to audioarticles@vaarta.com
பிக்பாஸ் தமிழ் டைட்டில் வின்னர் நடித்த முதல் திரைப்படத்தின் டீசரை நடிகர் சூர்யா வெளியிட்டுள்ள நிலையில் இந்த டீசர் வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
பிக்பாஸ் தமிழ் சீசன் 3 டைட்டில் வின்னர் முகென் என்பதும் மலேசியா சேர்ந்த இவர் தமிழில் ’வேலன்’ என்ற திரைப்படத்தில் நடித்து வந்தார் என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் டீசரை சற்று முன் நடிகர் சூர்யா தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
துருதுருவென இருக்கும் முகென் காட்சிகள் இந்த டீசரில் உள்ளதை அடுத்து தமிழ் சினிமாவிற்கு இன்னொரு இளைய தலைமுறை ஹீரோ கிடைத்துவிட்டார் என்றே கூறவேண்டும். மேலும் இந்த படத்தில் சூரி, பிரபு உள்பட பலர் நடித்துள்ளனர் என்பதும் இந்த படத்தை கவின் என்பவர் இயக்கி உள்ளார் என்பதும் சுந்தர் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Hearty wishes and respects to #ActorPrabhu na, who loves everyone like his own!! Wishes to team Velan! https://t.co/hf2Xp46AZU
— Suriya Sivakumar (@Suriya_offl) October 19, 2021
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments