close
Choose your channels

நீ பற்ற வைத்த நெருப்பொன்று.. பிக்பாஸ் விக்ரமனை மறைமுகமாக தாக்குகிறாரா அசீம்..!

Monday, July 17, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட விக்ரமன் குறித்து சர்ச்சைக்குரிய செய்திகள் ஊடகங்கள் மற்றும் இணைய தளங்களில் வைரல் ஆகி கொண்டிருக்கும் நிலையில் பிக் பாஸ் டைட்டில் வின்னர் அசீம், விக்ரமனை மறைமுகமாக தாக்கும் வகையில் ஒரு பதிவை செய்துள்ளதாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவரான விக்ரமன் டைட்டில் பட்டதை வெல்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சர்ச்சைக்குரிய போட்டியாளர் என்று கூறப்பட்ட அசீம் டைட்டில் பட்டத்தை வென்றார்.

இதனால் இருவருக்கும் இடையே மனக்கசப்பு ஏற்பட்டதாகவும் ஒருவரை ஒருவர் மறைமுகமாகவும் நேரடியாகவும் சமூக வலைத்தளங்களில் தாக்கிக் கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் பிக்பாஸ் விக்ரமன் மீது பெண் ஒருவர் பகீர் குற்றச்சாட்டு கூறி இருப்பதால் இது குறித்த செய்திகள் இணையதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் பிக்பாஸ் டைட்டில் வின்னர் அசீம் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளதாவது:

நீ பற்ற வைத்த நெருப்பொன்று பற்றி எரிய உனை கேட்கும், நீ விதைத்த வினையெல்லாம் உனை அறுக்க காத்திருக்கும். ( என் தத்துவம் ரீச் ஆகும், என்ன கொஞ்சம் லேட்டா ஆகும் )

இந்த பதிவு விக்ரமனை மறைமுகமாக தாக்குவதற்காக பதிவு செய்யப்பட்டது என்று ரசிகர்கள் கூறி வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment