சொன்ன சொல்லை காப்பாற்றிய பிக்பாஸ் டைட்டில் வின்னர்.. ரூ.50 லட்சம் பரிசை என்ன செய்தார் தெரியுமா?

  • IndiaGlitz, [Sunday,July 09 2023]

பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர் பட்டத்தை வென்ற அசீம், தனக்கு கிடைக்கும் 50 லட்சம் ரூபாய் பரிசு பணத்தில் பாதியை கொரோனாவால் பெற்றோர்களை இழந்த குழந்தைகளுக்கு கொடுப்பேன் என்று வாக்குறுதி அளித்துள்ளார். அந்த வகையில் தற்போது டிரஸ்ட் ஒன்றை ஆரம்பித்து தான் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றி உள்ளார்.

பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியின் சர்ச்சைக்குரிய போட்டியாளராக அசீம் கருதப்பட்டார். இந்த நிகழ்ச்சியில் விக்ரமன் தான் டைட்டில் பட்டதை வெல்வார் என்று அனைவரும் எதிர்பார்த்த நிலையில் அதிரடி விருப்பமாக அசீம் தான் டைட்டில் வின்னர் என்று அறிவிக்கப்பட்டது. இதனால் பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் அந்த விமர்சனத்தை கண்டு கொள்ளாத அசீம், தனக்கு கிடைத்த 50 லட்சம் ரூபாய் பரிசு பணத்தில் பாதியை அதாவது ரூ.25 லட்சத்தை கொரோனாவால் பெற்றோர்களை இழந்த குழந்தைகளுக்கு தருவேன் என்று வாக்குறுதி அளித்திருந்தார். அதன்படி தற்போது அசீம் தனது வாக்குறுதியை நிறைவேற்றி உள்ளார்.

அசீம் தனது பெயரில் அறக்கட்டளை ஒன்றை ஆரம்பித்து அதன் மூலம் கொரோனாவால் பெற்றோரை இழந்த ஏழை எளிய மாணவர்களுக்கு உதவி தொகையை வழங்கி உள்ளார். இது குறித்த புகைப்படங்கள் வெளியாகி உள்ள நிலையில் அனைவரும் அவரை பாராட்டி வருகின்றனர்.

இந்த நிலையில் இயக்குனர் பொன்ராம் இயக்கத்தில் உருவாக இருக்கும் அடுத்த திரைப்படத்தில் அசீம் ஹீரோவாக நடித்த ஒப்பந்தமாகியுள்ளார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

'காவாலா' பாடலுக்கு செம டான்ஸ் ஆடிய 'இரவின் நிழல்' நடிகை.. வைரல் வீடியோ..!

 சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'ஜெயிலர்' திரைப்படத்தில் இடம்பெற்ற 'காவாலா'  என்ற பாடல் சமீபத்தில் வெளியானது என்பதும் இந்த பாடல் பார்வையாளர்களின் எண்ணிக்கையில் சாதனை செய்து வருகிறது என்பதும்

மழைச்சாரலில் டூபீஎஸ் பிகினி உடை: நடிகை தர்ஷா குப்தாவின் நீச்சல்குள கிளாமர் வீடியோ..!

நடிகை தர்ஷா குப்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மழைச்சாரலில் நனைந்து கொண்டு பிகினி உடையில் நீச்சல் குளத்தில் குளிக்கும் வீடியோவை வெளியிட்டுள்ள நிலையில் இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.

விருப்பத்துடன் உடலுறவு… பின்பு கற்பழிப்பு மனு போட்ட பெண்ணின் வழக்கில் முக்கிய தீர்ப்பு!

ஒரு ஆணும் பெண்ணும் காதலித்து வந்த நிலையில் திருமணம் செய்து கொள்கிறேன் என்று வாக்குறுதி அளித்துவிட்டு இருவரும் உடலுறவு வைத்துக்கொண்ட பின்பு அந்த வாக்குறுதியை ஆண் நிறைவேற்றாமல் விட்டுவிட்டார்

கனமான கேரக்டரில் நடித்து இதயத்தை நிரப்பிய நடிகை ரேவதி… அழகான திரைப்பயணம்

தமிழ் சினிமாவில் 80களில் முன்னணி நடிகையாக பல திரைப்படங்களில் அழுத்தமான கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் பெரிய ஈர்ப்பை ஏற்படுத்திய நடிகை ரேவதிக்கு இன்று பிறந்தநாள்.

இளம் நடிகருக்கு கால் முறிவு… கிண்டல் செய்து பிக்பாஸ் நடிகை வெளியிட்ட அதிர்ச்சி வீடியோ!

தெலுங்கு சினிமாவில் பிரபல நடிகராக இருந்துவரும் நடிகர் ஒருவர் விபத்தில் கால் முறிவு ஏற்பட்டு தற்போது வீட்டில் முடங்கியிருக்கும் நிலையில்