ஒரு வழியாக காதலர் இவர் தான் என ஒப்புக்கொண்டாரா பிக்பாஸ் டைட்டில் வின்னர் அர்ச்சனா?

  • IndiaGlitz, [Monday,May 06 2024]

பிக் பாஸ் டைட்டில் வின்னர் அர்ச்சனா கடந்த சில வருடங்களாக அருண் பிரசாத் என்ற சீரியல் நடிகரை காதலித்துக் கொண்டிருப்பதாக கூறப்படும் நிலையில் தற்போது அவர் பதிவு செய்துள்ள கமெண்ட் அதனை உறுதி செய்துள்ளதாக கூறப்படுகிறது.

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் ஏழாவது சீசனில் வைல்ட்கார்டு போட்டியாளராக கலந்து கொண்ட அர்ச்சனா, அதன்பின் பல்வேறு சவால்களுக்கு பின் அந்த நிகழ்ச்சியில் தொடர்ந்து, டைட்டில் வின்னர் பட்டத்தையும் வென்றார் என்பது தெரிந்ததே.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு முன்பாக விஜய் டிவியில் ஒளிபரப்பான ’ராஜா ராணி’ என்ற தொடரின் இரண்டாவது பாகத்தில் அர்ச்சனா நடித்துள்ளார் என்பதும் அதனை அடுத்து அவர் சில சீரியல்கள் நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ’பாரதி கண்ணம்மா’ சீரியலில் நடித்த அருண் பிரசாத் மற்றும் அர்ச்சனா ஆகிய இருவரும் காதலிப்பதாக கூறப்பட்ட நிலையில் சமீபத்தில் அருண் பிரசாத் எடுத்த போட்டோஷூட் புகைப்படத்துக்கு அர்ச்சனா பதிவு செய்த கமெண்ட் தான் இருவரும் காதலிப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.

அந்த பதிவில் அவர் ’என் ஹீரோவை புகைப்படம் எடுத்ததற்கு நன்றி’ என்று கமெண்ட் செய்திருக்கிறார். இதன் மூலம் இருவரும் காதலர் என்பதை கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டிருந்தாலும் இருவரும் அதிகாரபூர்வமாக இதுவரை இது குறித்து அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் அருண்பிரசாத், அர்ச்சனா ஆகிய இருவரும் சேர்ந்து ஒரு ஆல்பம் பாடலில் நடிக்க இருப்பதாகவும் அதனை குறிப்பிட்டு தான் அர்ச்சனா அந்த பதிவு செய்ததாகவும் கூறப்படும் நிலையில் இதெல்லாம் புரமோஷனுக்காக இருக்குமோ என்ற சந்தேகமும் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

More News

யூடியூபர் வேடத்தில் ஜிவி பிரகாஷ்.. டிடெக்ட்டிவ் வேடத்தில் கெளதம் மேனன்.. தொடங்கியது டப்பிங் பணிகள்..!

யூடியூபர் வேடத்தில் ஜிவி பிரகாஷ், டிடெக்டிவ் வேடத்தில் கௌதம் மேனன் நடித்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிந்த நிலையில் தற்போது இந்த படத்தின் டப்பிங் பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

உங்க இஷ்டத்துக்கு வதந்தி பரப்பாதீங்க.. மலேசியாவில் இருந்து விளக்கமளித்த தமிழ் சீரியல் நடிகை.!

தமிழ் சீரியல் நடிகை ஒருவர் முக்கிய சீரியலில் இருந்து விலகப் போவதாக செய்திகள் வெளியான நிலையில் தற்போது மலேசியாவில்  கணவருடன் இருக்கும் அவர் அங்கிருந்து கொண்டே இந்த வதந்திக்கு விளக்கம் அளித்துள்ளார்.

துருவ் விக்ரம் - மாரி செல்வராஜ் படத்தின் டைட்டில் இதுதான்.. 2 நாயகிகள் அறிவிப்பு..!

சியான் விக்ரம் மகன் துருவ் விக்ரம் நடிப்பில் இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் ஒரு படம் உருவாக இருப்பதாக கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பே தகவல் வெளியான நிலையில் இந்த படத்தின் டைட்டிலுடன் கூடிய

மீண்டும் ஜெயம் ரவி வெளியேறுகிறாரா? அவருக்கு பதில் இவரா? 'தக்லைஃப்' படத்தில்  என்னதான் நடக்குது?

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் மணிரத்னம் இயக்கத்தில் ஏஆர் ரகுமான் இசையில் உருவாகி வரும் 'தக்லைஃப்' படத்திலிருந்து  ஜெயம் ரவி மற்றும் துல்கர் சல்மான் விலகியதாகவும்

இதை செய்யலைன்னா சுந்தர் சியை திட்டுவேன்.. சிம்ரன் முன்னிலையில் கூறிய குஷ்பு..!

சுந்தர் சி இயக்கத்தில் உருவான 'அரண்மனை 4' திரைப்படம் கடந்த வெள்ளி அன்று வெளியாகி வார இறுதியில் திருப்திகரமான வசூலை பெற்றுள்ளதாக கூறப்படும் நிலையில் இந்த படம் சுந்தர் சி அவர்களுக்கு ஒரு வெற்றி படமாகவே