கமலுக்கு மெசேஜ் அனுப்பிய பிக்பாஸ் டைட்டில் வின்னர் ஆரி!
Send us your feedback to audioarticles@vaarta.com
105 நாட்களாக நடைபெற்று வந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் நான்காவது சீசனின் டைட்டில் வின்னர் ஆக ஆரி மக்களால் தேர்வு செய்யப்பட்டார் என்பதும் அவருக்கு சம்பளம் மற்றும் பரிசு தொகை சேர்த்து கிட்டத்தட்ட ஒரு கோடி ரூபாய் கிடைத்தது என்பதும் அதைவிட அவர் கோடிக்கணக்கான மக்களின் மனதில் இடம் பிடித்தார் என்பதும் தெரிந்ததே.
இந்த நிலையில் பிக்பாஸ் டைட்டில் வென்ற ஆரிக்கு திரையுலகினர் வாழ்த்துக்களை குவித்து வருகின்றனர் என்பதும் தனக்கு வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் தற்போது ஆரி தனது சமூக வலைதளம் மூலம் நன்றி தெரிவித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி, ஆரிக்கு டைட்டில் கோப்பையை கொடுத்த கமலஹாசன் அவர்களுக்கு சமீபத்தில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது என்பதும், தற்போது அவர் மருத்துவமனையில் ஓய்வு எடுத்து வருகிறார் என்பது தெரிந்ததே
இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் ஆரி கூறியதாவது: அன்பார்ந்த கமல்ஹாசன் அவர்களுக்கு,’ உங்கள் உடல்நலம் சீக்கிரமாக குணமடைந்து நீங்கள் மேலும் பல உயரங்களும் சாதனைகளையும் செய்ய என் மனமார்ந்த வாழ்த்துக்கள் என்று கூறியுள்ளார். கமல்ஹாசனுக்கு ஆரி அனுப்பிய இந்த மெசேஜ் தற்போது வைரலாகி வருகிறது
அன்பார்ந்த கமல் Sirக்கு @ikamalhaasan உங்கள் உடல்நலம் சீக்கிரமாக குணமடைந்து நீங்கள் மேலும் பல உயரங்களும் சாதனைகளையும் செய்ய என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
— Aari Arjunan (@Aariarujunan) January 20, 2021
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments