இவர்கள் தான் உயர்வானவர்கள்: ஆரியே விரும்பி எடுத்து கொண்ட புகைப்படம்!

பிக் பாஸ் சீசன் 4 டைட்டில் வின்னரான ஆரி, அதன் பின்னர் ஒரு சில திரைப்படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார் என்பதும் ரசிகர்களை நேரில் சந்தித்து நன்றி கூறினார் என்பதும் தெரிந்ததே. மேலும் அவர் தனது சமூக வலைத்தளத்தில் ஆக்டிவ்வாக உள்ளார் என்பதும் அவ்வப்போது ரசிகர்களின் விருப்பத்திற்கு இணங்க புகைப்படங்களை பதிவு செய்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது

அந்த வகையில் தற்போது அவர் தனக்குப் பிடித்த புகைப்படம் என்று ஒரு புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். திருவண்ணாமலையில் தூய்மை பணியாளர்களுடன் அவர் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டாவில் பதிவு செய்துள்ளார். இந்த பதிவில் அவர் கூறியபோது ’நான் விரும்பி எடுத்துக்கொண்ட புகைப்படம் இது. குப்பை போடுபவர்களை விட அதை சுத்தம் செய்பவர்களை உயர்வானவர்கள். இதை கொரோனா காலத்தில் உலகிற்கு உணர்த்திய உங்களது சேவை மகத்தானது’ என்று குறிப்பிட்டுள்ளார்.

கொரோனா வைரஸ் உச்சத்தில் இருந்த நேரத்தில் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு இணையாக தங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல் தூய்மைப் பணியாளர்கள் தங்களது பணியை செய்து கொண்டு இருந்தார்கள் என்பதும் அவர்களுக்கு மிகப்பெரிய அளவில் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் குவிந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் தூய்மை பணியாளர்களை கௌரவப்படுத்தி உள்ள ஆரிக்கும் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது

More News

மிஸ் திருநங்கை 2021 போட்டியில் சாதனை படைத்த முதல் இந்தியத் திருநங்கை…குவியும் பாராட்டு!

மூன்றாம் பாலினமான திருநங்கைகள் உலகம் முழுவதும் தங்களுக்கு உரிய மதிப்பு மற்றும் சம வாய்ப்புகளுக்காகத் தொடர்ந்து போராடி வருகின்றனர்.

மணிமேகலையை நேரில் சென்று பார்த்த ஷகிலா: வைரல் புகைப்படம்!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி எதிர்பாராத வகையில் மிகப்பெரிய ஹிட் ஆகியுள்ள நிலையில் அந்த நிகழ்ச்சிக்கு பார்வையாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்

விஜய்சேதுபதி படத்தில் இணைந்த சிம்பு: ரசிகர்கள் உற்சாகம்!

நடிகர் சிம்பு மிகச்சிறந்த நடிகர் மட்டுமின்றி மிகச் சிறந்த பாடகர் என்பதும் அவர், தான் நடிக்கும் படங்களில் மட்டுமின்றி பிற நடிகர்களின் படங்களிலும் அவ்வப்போது பாடி வருகிறார் என்பதும் தெரிந்ததே

இந்திய திரைப்பட தயாரிப்பில் இறங்கும் அமேசான் பிரைம்! முதல் படத்தின் ஹீரோ அக்சயகுமார்!

அமேசான் ப்ரைம் இப்போது இந்தியாவில் திரைப்படத் தயாரிப்பிலும் பங்கேற்கிறது. அக்ஷய் குமார் நடிக்கும் ராம் சேது திரைப்படத்தின் இணை தயாரிப்பாளராக உருவெடுக்கிறது.

நடிகர் கமல்ஹாசன் கட்சி-பொருளாளர் வீட்டில் அதிரடி ரெய்டு!

நடிகர் கமல்ஹாசன் தலைமையேற்று நடத்தி வரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொருளாளராகத் தொழிலதிபர் சந்திரசேகரன் செயல்பட்டு வருகிறார்.