பிக்பாஸ் தமிழ் டைட்டில் வின்னருக்கு ஆண் குழந்தை: குவியும் வாழ்த்துக்கள்!

பிக்பாஸ் தமிழ் டைட்டில் வின்னருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதை அடுத்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

பிக்பாஸ் நிகழ்ச்சி விஜய் டிவியில் கடந்த 2017ஆம் ஆண்டு தொடங்கி ஐந்தாவது சீசனாக தற்போது நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனின் டைட்டில் வின்னர் ஆக ஆரவ் வெற்றி பெற்றார் என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் பிக்பாஸ் டைட்டில் வின்னர் ஆரவ்வுக்கும் நடிகை ராஹி என்பவருக்கும் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றது என்பதும் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ராஹி கர்ப்பமாக இருந்ததாகவும் செய்திகள் வெளியானது.

இந்த நிலையில் தற்போது ஆரவ் மனைவி ராஹி ஆண் குழந்தை பெற்றுள்ளதாகவும் தாய், மகன் இருவரும் நலமுடன் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. பிக் பாஸ் டைட்டில் வின்னர் ஆரவ்வுக்கு ஆண் குழந்தை பிறந்ததை அடுத்து அவருக்கு சக போட்டியாளர்கள் மற்றும் திரையுலகினர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

பிக்பாஸ் டைட்டில் வின்னர் ஆரவ் தற்போது ’ராஜபீமா’ உள்பட ஒரு சில திரைப்படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

கார் விபத்தில் சிக்கிய பிக்பாஸ் பிரபலம்… மருத்துவமனையில் அனுமதி!

நடிகர் சல்மான்கான் தொகுத்து வழங்கிய இந்தி பிக்பாஸ்  11 ஆவது சீசன்

'ஆர்.ஆர்.ஆர்.' பாடலுக்கு வேற லெவலில் டான்ஸ் ஆடிய தமிழ் பிக்பாஸ் பிரபலம்!

சமீபத்தில் வெளியான 'ஆர்.ஆர்.ஆர்.' என்ற திரைப்படத்தின் பாடலுக்கு தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரபலம் ஒருவர் செம டான்ஸ் ஆடிய வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது. 

கடலில் மீனாக இருந்தவள் நான்: விஜய் பட நாயகி

விஜய் படத்தில் நடித்துக்கொண்டிருக்கும் பிரபல நடிகை கடலில் நீந்தும் புகைப்படம் ஒன்றை பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படத்திற்கு லைக்ஸ் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

ஹாலிவுட் படத்திற்கு தயாராகும் ராஷ்மிகா மந்தனா: வைரல் வீடியோ!

தமிழ் தெலுங்கு திரையுலகின் பிரபல நடிகை ஒருவர் ஹாலிவுட் படத்திற்கு தயாராகி வருவது போன்ற வீடியோ ஒன்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது வைரல்

எலிமினேஷனுக்கு பின்னர் ஜோடி சேர்ந்த ஸ்ருதி-மதுமிதா: வைரல் புகைப்படங்கள்!

கடந்த 50 நாட்களுக்கும் மேலாக பிக்பாஸ் நிகழ்ச்சி விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிலையில் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட 18 போட்டியாளர்களில் ஆறு போட்டியாளர்கள்