படப்பெயர் அணிந்த டீசர்ட் உடன் வெள்ள நிவாரண உதவி செய்த பிக்பாஸ் நடிகர்.. செம்ம புரமோஷன்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்களில் ஒருவர் தனது படத்தின் பெயர் கொண்ட டி-ஷர்ட் அணிந்து வெள்ள நிவாரண உதவி செய்த நிலையில் அவரது படம் நல்ல புரமோஷன் பெற்றதாக தகவல் வெளியாகி உள்ளன.
பிக் பாஸ் போட்டியாளர்களில் ஒருவரான தர்ஷன் நடித்த ’நாடு’ திரைப்படம் கடந்த வாரம் வெளியான நிலையில் அவர் தனது இயக்குனர் மற்றும் படக்குழுவினர்கள் உடன் சென்று வெள்ளம் பாதித்த பகுதிகளில் நிவாரண உதவி செய்தார்.
வீட்டை விட்டு வெளியே வர முடியாத நிலையில் உள்ள மக்களுக்கு தண்ணீர் பாட்டில், உணவு பொருள் மற்றும் பால் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வழங்கினார். மேலும் தர்ஷன் மற்றும் படக்குழுவினர் அனைவரும் ’நாடு’ படத்தின் டீ சர்ட் அணிந்து சென்றதை எடுத்து படத்திற்கு செம ப்ரோமோஷன் கிடைத்ததாக கூறப்படுகிறது.
மனிதாபிமானத்துடன் வெள்ளம் பாதித்த பகுதிகளுக்கு சென்று உதவி செய்த ’நாடு’ படக்குழு நிவாரண உதவியை தங்களது படத்தின் பிரமோஷனாகவ்ம்பயன்படுத்தி கொண்டதாக கூறப்படுகிறது.
வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு வீடு வீடாக சென்று உதவிய 'நாடு' படக்குழு #NewsTamil24x7 | #Flood | #Michaungcyclone | #Michaung | #Rescue | #tharshan | @TharshanShant pic.twitter.com/uRq8AM0HhI
— News Tamil 24x7 | நியூஸ் தமிழ் 24x7 (@NewsTamilTV24x7) December 7, 2023
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments