சனம்ஷெட்டியை மனதார பாராட்டிய தர்ஷன்!

பிக்பாஸ் சீசன் 3 போட்டியாளர் தர்ஷன், பிக்பாஸ் சீசன் 4 போட்டியாளர் சனம்ஷெட்டி ஆகிய இருவர் இடையே கடந்த சில மாதங்களுக்கு முன் பிரச்சனைகள் இருந்து வந்த நிலையில் தற்போது சனம் ஷெட்டியை தர்ஷன் மனதார பாராட்டி இருப்பது பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது

பிக்பாஸ் தர்ஷன் மற்றும் பிக்பாஸ் சனம்ஷெட்டி ஆகிய இருவரும் காதலித்து வந்ததாகவும் இருவருக்கும் திருமண நிச்சயதார்த்தமும் நடந்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் திடீரென சனம்ஷெட்டியை திருமணம் செய்ய முடியாது என தர்ஷன் கூறியதாகவும் இதனையடுத்து இந்த விவகாரம் காவல்துறை வரை சென்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் பிக்பாஸ் 4 நிகழ்ச்சியில் சனம்ஷெட்டி கலந்து கொண்டதை அடுத்து அவரது விளையாட்டு குறித்து கருத்து கூறிய தர்ஷன், சனம் ஷெட்டியுடன் உள்ள உறவு குறித்து எதுவும் பேச விரும்பவில்லை என்றும் ஆனால் அதே நேரத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் சனம் சிறப்பாக விளையாடினார் என்றும் அவருக்கு எனது வாழ்த்துக்கள் என்றும் பாராட்டு தெரிவித்துள்ளார்.

தற்போது தர்ஷன், லாஸ்லியா உடன் இணைந்து ’கூகுள் குட்டப்பன்’ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் குறித்து தர்ஷன் கூறியபோது ’ஏற்கனவே அறிமுகமான லாஸ்லியா உடன் நடிப்பது தனக்கு மிகுந்த மகிழ்ச்சியாக இருப்பதாகவும், அது மட்டுமின்றி லாஸ்லியா ஒரு இலங்கை பெண்ணாகவே நடிப்பது தனக்கு கூடுதல் மகிழ்ச்சியாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது என்பதும் அது மட்டுமின்றி மேலும் 2 படங்களில் நடிக்க கமிட் ஆகியுள்ளதாகவும், 2021ஆம் ஆண்டு தனக்கு சிறந்த ஆண்டாக இருப்பதாகவும் தர்ஷன் கூறியுள்ளார்.