ஊ சொல்றியா மாமா' பாடலுக்கு தாமரை ஆடும் டான்ஸ்: உடன் ஆடுபவர் யார் தெரியுமா?
Send us your feedback to audioarticles@vaarta.com
பிரபல தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நடித்த ’புஷ்பா’ திரைப்படத்தில் இடம்பெற்ற ’ஊ சொல்றியா மாமா, ஊஊ சொல்றியா மாமா’ என்ற ஐட்டம் பாடலுக்கு நடிகை சமந்தா டான்ஸ் ஆடினார் என்பதும் இந்த பாடல் மிகப்பெரிய வரவேற்பை இளைஞர் மத்தியில் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ் உள்பட ஒரு சில மொழிகளில் ’புஷ்பா’ திரைப்படம் வெற்றி அடைவதற்கு இந்த பாடலும் ஒரு முக்கிய காரணம் என்பது விமர்சகர்களின் கருத்தாக உள்ளது
இந்த நிலையில் இந்த பாடலுக்கு பல தமிழ் திரையுலக பிரபல நடிகைகள் டான்ஸ் ஆடியதன் வீடியோக்களை தங்களது சமூக வலைதளங்களில் பதிவு செய்துள்ள நிலையில் அந்த வீடியோக்களும் வைரல் ஆகி வருகின்றன என்பதை பார்த்தோம்.
இந்த நிலையில் சமீபத்தில் முடிவடைந்த பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் இடம்பெற்ற போட்டியாளர்களான தாமரைச்செல்வி மற்றும் ஐக்கி பெர்ரி ஆகிய இருவரும்’ஊ சொல்றியா மாமா, ஊஊ சொல்றியா மாமா’ என்ற பாடலுக்கு டான்ஸ் ஆடிய வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது. தாமரை அக்கா ஆடிய இந்த நடனத்தை பகிர்வதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன் என ஐக்கி பெர்ரி தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார்
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com