தாமரை கேட்டதையெல்லாம் வாங்கி கொடுத்த பிக்பாஸ் சீசன் 5 போட்டியாளர்!
Send us your feedback to audioarticles@vaarta.com
பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றதன் மூலம் பிரபலமான நாடக கலைஞர் தாமரைசெல்வி, தற்போது பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சிகளில் பங்கு கொண்டுள்ளார் என்பதும், முதல் நாள் முதலே அவர் ஜாலியாக விளையாடி வருகிறார் என்பதும் தெரிந்ததே.
இந்த நிலையில் பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் தனக்கு ஏற்பட்ட அனுபவங்களை தாமரை பிக்பாஸ் அல்டிமேட் சக போட்டியாளர்களிடம் பகிர்ந்து கொண்டார். அப்போது வருண் பற்றி ஒரு சில விஷயங்களை கூறினார். வருண் தனது வீட்டிற்கு தேவையான பொருட்களை எல்லாம் வாங்கிக் கொடுத்தார் என்றும் குறிப்பாக இரண்டு டோர் கருப்பு நிற பிரிட்ஜ் மற்றும் ஓவன் எல்லாம் வாங்கி தந்ததாகவும் அவர் கூறினார்.
ஏற்கனவே பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியின் போது தாமரை ஒரு போட்டியில் கேஸ் ஸ்டவ் வெற்றி பெற்ற போது துள்ளிக் குதித்தார் என்பதும் அப்போதே அவருக்கு தேவையான பொருட்களை வாங்கி கொடுக்க வருண் முடிவு செய்ததாகவும் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே சென்றவுடன் தான் கேட்ட பொருட்களை எல்லாம் வாங்கிக் கொடுத்ததாகவும் தாமரை கூறியுள்ளார். இது குறித்த வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது.
#BBUltimate #BiggBossTamil #BiggBossTamilOTT #thamarai #varun
— jaya suriya s (@jayasuriyas21) January 31, 2022
varun is a good hearted person pic.twitter.com/BiIbTSR2AG
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments