பேண்ட் - டிசர்ட் காஸ்ட்யூம், கட்டிப்பிடித்து முத்தம்: பிக்பாஸ் தாமரையின் வேற லெவல் வீடியோ!
Send us your feedback to audioarticles@vaarta.com
பிக்பாஸ் நிகழ்ச்சியில் சேலை மற்றும் சுடிதார் காஸ்ட்யூமில் அடக்க ஒடுக்கமாக விபூதி பட்டை, குங்குமப் பொட்டுடன் குடும்ப பாங்காக தோற்றமளித்த பிக்பாஸ் தாமரை தற்போது பேண்ட்-டிசர்ட், கோட் காஸ்டியூமில் மேற்கத்திய இசைக்கு டான்ஸ் ஆடிய வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது.
பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவர் தாமரை என்பதும் இந்த நிகழ்ச்சி பற்றி தனக்கு தெரியாது என்று கூறிய கிட்டத்தட்ட கடைசி வரை தாக்கு பிடித்து விளையாடினார் என்பதும் தெரிந்ததே. பிக்பாஸ் முடிந்ததும், பிக்பாஸ் அல்டிமேட் என்ற 24 மணி நேர நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு சிறப்பாக விளையாடினார் என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் தற்போது பிக்பாஸ் ஜோடி நிகழ்ச்சியிலும் தனது கணவருடன் இணைந்து ஆடி வருகிறார் என்பதும் அவருக்கு நடுவர் ரம்யா கிருஷ்ணன் நல்ல கமெண்ட்களை அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவரான ஐக்கி பெர்ரியுடன் இணைந்து நடனமாடும் தாமரை செம ஆட்டம் ஆடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. ஐக்கி பெர்ரியின் இன்ஸ்டாகிராமில் பதிவு செய்யப்பட்டுள்ள இந்த வீடியோவில் பேண்ட் டி-சர்ட் கோட் அணிந்த தாமரை, ஐக்கி பெர்ரியுடன் செம டான்ஸ் ஆடுவதும், ஐக்கி பெர்ரி அவருக்கு முத்தம் கொடுக்கும் காட்சியும் உள்ளது. ஆள் அடையாளமே தெரியாமல் வித்தியாசமான காஸ்ட்யூமில் உள்ள தாமரைக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments