பிக்பாஸ் 4 நிகழ்ச்சியில் எஸ்பிபிக்கு இரங்கல்!
Send us your feedback to audioarticles@vaarta.com
பிரபல பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியன் அவர்களின் உடல் இன்று அரசு மரியாதையுடன் அவரது தாமரைப்பாக்கம் பண்ணை வீட்டில் நல்லடக்கம் செய்யப்பட்டது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் நேற்று மறைந்த எஸ்பிபிக்கு இன்றும் தொடர்ந்து பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர் என்பதும், அவரது மறைவு குறித்த ஹேஷ்டேக்குகள் நேற்றும் இன்றும் தொடர்ச்சியாக டிரெண்டில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் பிக்பாஸ் 4 தெலுங்கு நிகழ்ச்சி தற்போது நடைபெற்று வரும் நிலையில் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் நடிகர் நாகார்ஜுனா இன்றைய நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்பாக எஸ்பிபி அவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் காட்சிகள் உள்ளன. இது குறித்த புரோமோ வீடியோவை நாகார்ஜூனா தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
நாகார்ஜுனா நடித்த பல படங்களில் பல பாடல்களை பாடிய எஸ்பிபிக்கு அவர் இரங்கல் தெரிவித்துள்ள நிலையில், வரும் அக்டோபர் 4ஆம் தேதி பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சி தொடங்கும் போதும், எஸ்பிபிக்கு அஞ்சலி செலுத்திவிட்டு கமலஹாசன் நிகழ்ச்சியை தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது
??#RIPSPB https://t.co/OOeSszhfiO
— Nagarjuna Akkineni (@iamnagarjuna) September 26, 2020
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments