பிக்பாஸ் வீட்டில் திடீரென நுழைந்த டாக்டர்: உடல்நலமின்றி வெளியேறிய போட்டியாளர்!

  • IndiaGlitz, [Tuesday,October 13 2020]

பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சி கடந்த வாரம் ஆரம்பித்து விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. அறந்தாங்கி நிஷாவின் அரட்டைகளும், சுரேஷ் சக்கரவர்த்தியின் சேட்டைகளும் தினந்தோறும் இந்த நிகழ்ச்சி விறுவிறுப்பாக கொண்டு செல்கிறது.

இந்த நிலையில் பிக்பாஸ் தமிழ் போலவே தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியும் தற்போது சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது. நாகார்ஜுனா தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சி தெலுங்கு மாநில மக்களை பெரிதும் கவர்ந்து வருகிறது.

இந்த நிலையில் திடீரென பிக்பாஸ் தெலுங்கு நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவரான Gangavva என்பவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இணையத்தின் மூலம் பிரபலமான இந்த பெண்மணி பிக்பாஸ் நிகழ்ச்சியில் பெரும் கனவுடன் கலந்து கொண்டார். ஆனால் அவருக்கு திடீரென உடல்நலக்கோளாறு ஏற்பட்டதை அடுத்து பிக் பாஸ் வீட்டிற்குள் சென்ற டாக்டர் அவரது உடல்நிலையை சோதனை செய்து அவருக்கு உடனடியாக மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க வேண்டும் என பரிந்துரை செய்துள்ளார்.

இதனை அடுத்து மருத்துவரின் பரிந்துரையை ஏற்றுக் கொண்ட நாகார்ஜுனா பிக்பாஸிடம் அனுமதி பெற்று அவரை வீட்டைவிட்டு வெளியேற்றினார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் பெரும் கனவுகளுடன் கலந்து கொள்ள வந்த Gangavva உடல்நல குறைவு காரணமாக கண்ணீர் சிந்தியபடி வெளியேறினார். அவரது நிலையை பார்த்து சக போட்டியாளர்களும் கலங்கி நின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.