சூர்யாதேவியை அடுத்து எலிசபெத் ஹெலனும் போட்டியாளரா? களைகட்டும் பிக்பாஸ் 4!

நடிகை வனிதா, பீட்டர்பால் என்பவரைத் திருமணம் செய்ததாக கூறப்படும் விவகாரம் கடந்த சில மாதங்களாக ஊடகங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பல ஊடகங்களில் தலைப்புச் செய்தியாகவும் சமூக ஊடகங்களில் இது விவாத பொருளாக மாறியது. இதற்காகவே ஒரு சிலர் யூடியூப் அக்கவுண்ட் தொடங்கி அதில் சர்ச்சைக்குரிய வீடியோக்களை பதிவு செய்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சி விரைவில் தொடங்க உள்ள நிலையில் இந்த நிகழ்ச்சியில் வனிதாவை கடுமையாக விமர்சனம் செய்த சூர்யா தேவி ஒரு போட்டியாளர் என்று அரசல் புரசலாக தகவல் வந்தது. அவர் ஒருவேளை போட்டியாளர்களில் ஒருவராக இருந்தால், பிக் பாஸ் நிகழ்ச்சியில் வனிதாவை கடுமையாக விமர்சனம் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் திடீர் திருப்பமாக பீட்டர்பால் முதல் மனைவி எலிசபெத் ஹெலனும், பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருப்பதாகவும் அவரிடம் பிக்பாஸ் குழுவினர் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது. வனிதாவுக்கு பிடிக்காத இருவரை பிக் பாஸ் நிகழ்ச்சியில் கொண்டு வந்திருப்பதால் நிகழ்ச்சி முற்றிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இருப்பினும் சூர்யா தேவி, எலிசபெத் ஹெலன் ஆகிய இருவரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களா? என்பதை பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கும் அன்று தான் உறுதி செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது

More News

குடும்பத்துடன் கொரோனாவால் பாதிக்கப்பட்ட தமிழ் நடிகை: தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை

குடும்பத்துடன் கொரோனாவால் பாதிக்கப்பட்ட தமிழ் நடிகை ஒருவர் மருத்துவரின் ஆலோசனைப்படி வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக வெளிவந்துள்ள செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 

எந்த நேரத்தில் வேண்டுமானாலும் ஓய்வு- பதற வைக்கும் மத்திய அரசின் சுற்றறிக்கை!!!

50-55 வயதைக் கடந்த மத்திய அரசு ஊழியர்கள் அல்லது 30 ஆண்டுகளுக்கு பிறகும் பணியாற்றும் மத்திய அரசு ஊழியர்களுக்கு எந்த நேரத்தில் வேண்டுமானாலும் ஓய்வு

நான் சுங்கக்கட்டணம் தரமாட்டேன்- நடுரோட்டில் நிர்வாணப்  போராட்டம் நடத்திய சாமியார்!!!

கர்நாடக மாநிலத்தில் உள்ள ஒரு சுங்கச்சவாடி ஒன்றில் மாடாதிபதி ஒருவர் சுங்கக்கட்டணம் செலுத்தமாட்டேன் எனக் கூறியதோடு ஆடைகளைக் களைந்து

கர்நாடக அரசியல் கட்சியின் மூத்த தலைவர் கொரோனாவுக்கு பலி!!! அதிர்ச்சி தகவல்!!!

கர்நாடக மாநிலத்தின் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் எம்எல்ஏவுமான அப்பாஜி கவுடா கொரோனாவால் உயிரிழந்தார் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி இருக்கிறது

செல்போன் இல்லாததால் உயிரிழந்த கல்லூரி மாணவி! உடன்கட்டை ஏறினாரா காதலர்?

ஆன்லைன் படிப்புக்காக செல்போன் இல்லாததால் உளுந்தூர்பேட்டை மாணவி ஒருவர் நேற்று விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதாக செய்தி வெளியானது தெரிந்ததே