விஷ்ணுவை லேசா சுரண்டினா போதும்.. கடைசி வாரத்திலும் வம்புக்கிழுக்கும் மாயா..!
Send us your feedback to audioarticles@vaarta.com
பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஃபினாலே இந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ள நிலையில் தற்போது 6 போட்டியாளர்கள் உள்ளனர். இந்த வாரம் ஒருவர் எலிமினேஷன் செய்யப்பட்டால் விஷ்ணு உள்பட ஐந்து போட்டியாளர்கள் இறுதிப் போட்டிக்கு செல்வார்கள்.
இந்த நிலையில் கடைசி வாரத்தில் கூட போட்டியாளர்கள் ஒருவருக்கு ஒருவர் குற்றம் சொல்லிக்கொண்டும் குறை சொல்லிக் கொண்டும் இருக்கும் தன்மையைத்தான் கடைபிடிக்கின்றனர்.
இந்த நிலையில் இன்றைய முதல் புரமோவில் ’நீங்கள் ஒவ்வொருவரும் உங்களோட கேம் எந்த விதத்தில் மத்தவங்களோட கேமை விட சிறந்தது என்பதை சொல்ல வேண்டும்’ என்று பிக் பாஸ் ஒரு டாஸ்க் வைக்கிறார்
அப்போது முதலில் வரும் மாயா ’விஷ்ணுவை ஈசியா சுரண்டினால் போதும், உடனே ட்ரிகர் ஆகி ஒன்னு பண்ணி, வேற லெவல்ல பிளாஸ்ட் ஆயிடுவார் என்று கூறுகிறார். அர்ச்சனா குறித்து கூறும் தினேஷ் ’ஹைலைட் பண்ணுவதில் அவர் மிகவும் கவனமாக இருப்பார் என தோன்றுகிறது’ என்று கூறுகிறார்
’சின்ன சின்ன விஷயத்தை கூட அவர் ஊதி பெருசாக்குகிறாரோ என தோன்றுகிறது’ என்று அர்ச்சனா குறித்து மணி கூறுகிறார், ‘இதுவரை பார்த்ததில் மிகவும் சிறப்பாக விளையாடியவர் தினேஷ்’ என்று விஜய் வர்மா கூறுகிறார். மொத்தத்தில் இந்த டாஸ்க் ஆறு பேர்களுக்கு இடையே கருத்து வேறுபாடுகளை அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com