இனிமேல் இதை செஞ்சிங்கன்னா வெளியே அனுப்பிவிடுவேன்: ஏடிகேவை எச்சரித்த பிக்பாஸ்
Send us your feedback to audioarticles@vaarta.com
இனிமேல் இதை செய்தால் உங்களை பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியே அனுப்புவதைத் தவிர எனக்கு வேறு வழியில்லை என பிக்பாஸ், போட்டியாளர்களில் ஒருவரான ஏடிகேவுக்கு எச்சரிக்கை செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த 85 நாட்களுக்கும் மேலாக நடைபெற்று வரும் நிலையில் தற்போது இறுதி கட்டத்தை நெருங்கி உள்ளது என்பதும் இன்னும் இரண்டு வாரங்களில் கிராண்ட் பினாலே நடைபெற உள்ளது என்பதும் தெரிந்ததே.
இந்த நிலையில் கன்பெக்சன் அறைக்கு ஏடிகேவை அழைத்த பிக்பாஸ் உங்கள் உடல்நிலை மிகவும் மோசமாக உள்ளது என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள், உங்கள் உடல்நிலை மோசமானதற்கு காரணம் நீங்கள் அடிக்கடி புகைப்பிடிப்பது தான், இனிமேல் நீங்கள் புகை பிடிக்கக் கூடாது என்று மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளார்கள், எனவே உங்கள் உடல்நலனை நீங்கள் தான் கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும், இனிமேலும் நீங்கள் புகை பிடித்தால் உங்களை வெளியே அனுப்புவதை தவிர வேறு வழியில்லை என்றும் பிக்பாஸ் எச்சரிக்கையுடன் தெரிவித்தார்.
இதனை அடுத்து தனக்கு மிகவும் மன அழுத்தமாக இருக்கும் நேரத்தில் தான் புகைப்பிடிக்கின்றேன் என்றும், என்றால் அது தவறு என்று எனக்கு தெரியும் என்றும் இனிமேல் கவனமாக இருந்து கொள்வேன் என்றும் ஏடிகே தெரிவித்துள்ளார்.
ADK is warned by Bigg Boss to not smoke anymore while having a medical condition.#BiggBossTamil6 pic.twitter.com/huzQYnc6LA
— Bigg Boss Follower (@BBFollower7) January 4, 2023
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com