மைனாவுக்கும் அவரது கணவருக்கும் பிக்பாஸ் வைத்த டாஸ்க். சொதப்பிய தம்பதிகள்!
- IndiaGlitz, [Tuesday,December 27 2022]
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் உறவினர்கள் வருகை தரும் வாரம் என்பதால் சென்டிமென்டாக இருக்கும் என்பதை முதல் புரமோவில் இருந்து பார்த்தோம். இந்த நிலையில் அடுத்த வீடியோ வெளியாகி இருக்கும் நிலையில் அதில் மைனா மற்றும் அவரது கணவர் யோகி ஆகிய இருவருக்கும் பிக்பாஸ் டாஸ்க் வைக்கின்றார்.
லக்சரி பட்ஜெட் டாஸ்க்கான இதில் மைனா மற்றும் அவரது கணவர் யோகி ஆகியோர்களுக்கு நான்கு கேள்விகள் கேட்கப்படுகிறது. முதல் கேள்வியாக மைனாவுக்கு பிரியாணி ரொம்ப பிடிக்கும் என்று கேட்க அதற்கு ஆம் என்றும் இல்லை என்றும் பதில் கூற வேண்டும். இந்த கேள்விக்கு யோகி ஆம் என்றும், மைனா இல்லை என்றும் பதில் கூறியதால் முதல் கேள்விக்கு மதிப்பெண் இல்லை.
இதனை அடுத்து மைனா குழந்தையை விட மைனாவின் சேட்டை அதிகமானது என்ற கேள்விக்கு இருவருமே ‘யெஸ்’ என்ற பதிலை அளித்துள்ளதால் இந்த கேள்விக்கு இருவரும் சரியான பதிலை அளித்து உள்ளனர். ஆனால் அதே நேரத்தில் அடுத்த கேள்வியாக மைனா இந்த வீட்டின் தலைவராக இரண்டு முறை பதவி ஏற்றுள்ளார் என்று கூற உடனே அந்த கேள்விக்கு மைனா சொதப்பி ’இல்லை இல்லை நான் மூன்று முறை’ என்று கூறிவிட்டார். யோகி ’நோ’ என்ற சரியான பதிலை அளித்தாலும் இந்த கேள்விக்கு மதிப்பெண் கிடையாது என பிக்பாஸ் அறிவித்துள்ளார்.
இதனை அடுத்து நான்காவது கேள்வியாக யோகியின் போனை அவருக்கு தெரியாமல் மைனா செக் செய்வதுண்டா? என்ற கேள்விக்கு இருவருமே ‘யெஸ்’ என்று கூறியதை அடுத்து அந்த கேள்விக்கும் அவர்களுக்கு மதிப்பெண் கிடைத்துள்ளது. மொத்தம் நான்கு கேள்விகளுக்கு இரண்டு கேள்விகளுக்கு மட்டுமே மைனா - யோகி தம்பதியினர் சரியான பதிலை அளித்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Luxury budget task: Myna's family.#BiggBossTamil6 pic.twitter.com/zzJXR34csD
— Bigg Boss Follower (@BBFollower7) December 27, 2022