எனக்கு பிரியங்கா ப்ரெண்டே கிடையாது: பிரேக்கிங் நியூஸ் தந்த தாமரை!

எனக்கு பிரியங்கா ப்ரெண்டே கிடையாது என தாமரை பிரேக்கிங் நியூஸ் டாஸ்க்கில் தெரிவித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

விஜய் டிவியில் கடந்த 50 நாட்களுக்கும் மேலாக பிக்பாஸ் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது என்பதும் தற்போது போட்டியாளர்கள் மத்தியில் விறுவிறுப்பு ஏற்பட்டு உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் பிக்பாஸ் வீட்டில் இன்று பிரேக்கிங் நியூஸ் என்ற டாஸ்க் கொடுக்கப்படுகிறது. போட்டியாளர்கள் அனைவரும் இரண்டு அணிகளாக பிரியவேண்டும் ஒன்று ரெட் டிவி அணி மற்றொன்று ப்ளூ டிவி அணி என்றும் பிக்பாஸ் அறிவித்துள்ளார். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கும் போட்டியாளர்கள் பிரேக்கிங் செய்திகள் கூறுவது போலவே தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் பிரியங்கா வருணிடம் கூறும்போது, ‘எனக்கு ஒன்று நன்றாக புரிந்து விட்டது. யார் யாரை இந்த வீட்டில் நம்ப வேண்டும், யார் யாரை நம்பக் கூடாது என்பது தெரிந்துவிட்டது என்று கூறினார்.

இதனை அடுத்து விவாதம் போன்று நடக்கும் நிகழ்ச்சியில் தாமரை மற்றும் பிரியங்கா கலந்து கொள்கிறார்கள். அதில் பிரியங்கா எந்த மாதிரி கேரக்டர்? உங்கள் தோழியா? என கேட்ட போது, ‘பிரிங்கா எனக்கு ப்ரெண்டே கிடையாது, நம்ம பேச்சு மட்டும் உசந்ததா இருக்கணும் மத்தவங்க எல்லாம் நம்மளுக்கு கீழதான் இருக்கணும் என நினைப்பது பிரியங்கா ஒருவர்தான்’ என்று ஆணித்தரமாக கூறுகிறார். இதை கேட்டு பிரியங்கா அதிர்ச்சி அடையும் காட்சிகளோடு இன்றைய முதல் புரோமோ வீடியோ முடிவுக்கு வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

More News

நடிகை கீர்த்தி சுரேஷ் நடிக்கும் அடுத்தப் படம் குறித்த அட்டகாசமான தகவல்!

தமிழ், தெலுங்கு, மலையாளம் என தென்னிந்திய மொழிகளில் கலக்கிக் கொண்டிருக்கும் நடிகை கீர்த்தி சுரேஷ் தற்போது புதிய அவதாரம்

மனைவியுடன் பாக்சிங் செய்யும் வில்லன் நடிகர்… இணையத்தை கலக்கும் புகைப்படம்!

பா.ரஞ்சித் இயக்கத்தில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற திரைப்படம் “சார்பாட்டா பரம்பரை“. இந்தப்

எனது நடனத் திறமைக்கு இதுதான் காரணம்… சாயிஷா வெளியிட்ட அட்டகாசமான பதிவு!

தமிழ் சினிமா வட்டாரத்தில் நட்சத்திரத் தம்பதிகளாக வலம்வரும் நடிகர் ஆர்யா- நடிகை சாயிஷா தம்பதியினருக்கு கடந்த ஜுலை

பயமுறுத்தும் ஒமைக்ரான் கொரோனா வைரஸ்… என்ன காரணம்?

கொரோனா நோய்த்தொற்றை ஏற்படுத்தும் SARS-Cov-2 வைரஸ் முதன் முதலில் கடந்த 2019 டிசம்பர் மாதம் சீனாவின் வுகான்

'ஆர்.ஆர்.ஆர்' டிரைலர் தேதியை அறிவித்த எஸ்.எஸ்.ராஜமெளலி!

பிரமாண்ட இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமெளலி இயக்கத்தில் ஜூனியர் என்டிஆர் மற்றும் ராம்சரண் தேஜா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'ஆர்.ஆர்.ஆர்'. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட்