இதுக்கு மேல பொறுமையா இருக்க முடியாது பிக்பாஸ்: டேனியல் மட்டுமல்ல நாங்களும்தான்
Send us your feedback to audioarticles@vaarta.com
பிக்பாஸ் நிகழ்ச்சியின் பங்கேற்பாளர்களுக்குள் தினந்தோறும் பிரச்சனைகள் அதிகரித்து வரும் நிலையில் இந்த சண்டையால் போட்டியாளர்களுக்கு போரடிக்கின்றதோ இல்லையோ, பார்வையாளர்களுக்கு வெறுப்பு அதிகமாகி கொண்டே வருகிறது.
குறிப்பாக மகத் நாளுக்கு நாள் மனநிலை மாறி வருவது ஒருபக்கம் வெறுப்பாக இருந்தாலும் இன்னொரு பக்கம் வேதனையாகத்தான் உள்ளது. ஐஸ்வர்யா, யாஷிகாவுடான் சேர்ந்து கொண்டு அவர் சக போட்டியாளர்களுக்கு கொடுக்கும் டார்ச்சரின் அளவுக்கு எல்லையே இல்லாமல் போய்விட்டது
இந்த நிலையில் இன்றைய டாஸ்க்கில் மகத் அத்துமீறி நடந்து கொள்கிறார். யாஷிகாவிடம் அநாகரீகமாக நடந்து கொண்டதுடன் பாலாஜி மற்றும் டேனியலை தாக்கும் வகையிலும் நடந்து கொள்வதாக தெரிகிறது. புரமோவின் இறுதியில் 'என்னை அவன் அடிச்சிட்டான், இதுக்கு மேல என்னால பொறுமையாக இருக்க முடியாது' என்று டேனியல் கூறுகிறார். டேனியல் மட்டுமின்றி இந்த நிகழ்ச்சியை பார்க்க நமக்கும் பொறுமை இல்லை என்பதே உண்மையாக உள்ளது.
#பிக்பாஸ் இல்லத்தில் இன்று.. #BiggBossTamil - தினமும் இரவு 9 மணிக்கு உங்கள் விஜயில்.. #VivoBiggBoss @Vivo_India pic.twitter.com/BEwEAG3QKI
— Vijay Television (@vijaytelevision) August 23, 2018
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com