பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்தவுடன் ஜனனியின் முதல் பதிவு.. யாரிடம் மன்னிப்பு கேட்டார் தெரியுமா?
Send us your feedback to audioarticles@vaarta.com
பிக்பாஸ் வீட்டில் இருந்து நேற்று எலிமினேட் செய்யப்பட்ட ஜனனி தனது சமூக வலைத்தளத்தில் முதல் பதிவு செய்துள்ள நிலையில் அதில் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளார்.
பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த 70 நாட்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் ஒவ்வொரு வாரமும் நாமினேஷன் பட்டியலில் உள்ள குறைந்த வாக்குகள் பெற்ற போட்டியாளர் ஒருவர் வெளியேற்றப்பட்டு வருகிறார் என்பதை பார்த்து வருகிறோம்.
அந்த வகையில் இந்த வாரம் ஏடிகே வெளியேறுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் எதிர்பாராததை எதிர் பாருங்கள் என்ற பிக்பாஸ் நிகழ்ச்சியின் மந்திரத்திற்கு ஏற்ப ஜனனி வெளியேற்றப்பட்டார். இதனால் ஜனனி ஆர்மியினர் கடும் அதிர்ச்சி அடைந்தனர். இருப்பினும் இலங்கையில் இருந்து வந்த ஜனனி இந்த 70 நாட்களில் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் ஜனனி பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்ததும் தனது சமூக வலைத்தளத்தில் முதல் பதிவை போட்டுள்ளார். அதில் நான் எப்படி இருந்தாலும் என்னை பிக்பாஸ் வீட்டில் ஏற்றுக் கொண்ட அனைவருக்கும் என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். உங்கள் வாக்குகள் தான் என்னை பெரிய அளவில் ஊக்கப்படுத்தி உள்ளது. இருப்பினும் பிக்பாஸ் வீட்டில் நான் இருந்த நாட்களில் உங்கள் எதிர்பார்ப்பை என்னால் பூர்த்தி செய்ய முடியவில்லை என்றால் மன்னித்துக்கொள்ளுங்கள். இந்த நிமிடம் முதல் அனைத்து வழிகளிலும் உங்களை மகிழ்விக்க என்னால் முடிந்ததை செய்வேன்’ என்று பதிவு செய்துள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com