போலீஸ் விசாரணையில் நடந்தது என்ன? பிக்பாஸ் புரமோவில் வனிதா
Send us your feedback to audioarticles@vaarta.com
பிக்பாஸ் வீட்டின் போட்டியாளர்களில் ஒருவரான வனிதாவை தெலுங்கானா மாநில போலீசார் நேற்று சுமார் இரண்டு மணி நேரம் விசாரணை செய்தனர். வனிதாவின் முன்னாள் கணவர் அளித்திருந்த புகாரின் அடிப்படையில் இந்த விசாரணை நடந்ததாக கூறப்பட்டது.
இந்த நிலையில் இன்றைய அடுத்த புரமோவில் 'போலீஸ் தன்னிடம் விசாரணை செய்தது குறித்து வனிதா ரேஷ்மாவிடம் கூறுகிறார். இந்த வழக்கை விரைவில் முடிப்பதற்காகவே இவ்வளவு தூரம் வந்ததாக போலீஸ் அதிகாரி தன்னிடம் கூறியதாகவும், இந்த வழக்கில் தனக்கு இரண்டு ஆப்சன்கள் இருப்பதாகவும், ஒன்று வழக்கு முடியும் வரை குழந்தையை திருப்பி கொடுத்துவிட வேண்டும் என்பது என்றும், இன்னொன்று ஸ்டேட்மெண்ட் ஒன்றை கொடுத்துவிட்டு குழந்தையை அவர்களிடம் காண்பித்தால் போதும்' என்றும் கூறினார்.
வனிதாவை ரேஷ்மா கட்டிப்பிடித்து ஆறுதல் கூறுவதுடன் இந்த புரமோ முடிவடைகிறது. டி.ஆர்.பியை அதிகரிக்க அதிகபட்சமாக என்னவெல்லாம் செய்ய முடியுமோ அதனை பிக்பாஸ் குழுவினர் செய்து வருவதால் ஒவ்வொரு நாளும் விறுவிறுப்புடன் சென்று கொண்டிருக்கின்றது பிக்பாஸ் நிகழ்ச்சி.
#பிக்பாஸ் இல்லத்தில் இன்று.. #Day11 #Promo3 #BiggBossTamil - தினமும் இரவு 9:30 மணிக்கு உங்கள் விஜயில்.. #BiggBossTamil3 #VijayTelevision pic.twitter.com/wBN38qFD5A
— Vijay Television (@vijaytelevision) July 4, 2019
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments