போலீஸ் விசாரணையில் நடந்தது என்ன? பிக்பாஸ் புரமோவில் வனிதா

பிக்பாஸ் வீட்டின் போட்டியாளர்களில் ஒருவரான வனிதாவை தெலுங்கானா மாநில போலீசார் நேற்று சுமார் இரண்டு மணி நேரம் விசாரணை செய்தனர். வனிதாவின் முன்னாள் கணவர் அளித்திருந்த புகாரின் அடிப்படையில் இந்த விசாரணை நடந்ததாக கூறப்பட்டது.

இந்த நிலையில் இன்றைய அடுத்த புரமோவில் 'போலீஸ் தன்னிடம் விசாரணை செய்தது குறித்து வனிதா ரேஷ்மாவிடம் கூறுகிறார். இந்த வழக்கை விரைவில் முடிப்பதற்காகவே இவ்வளவு தூரம் வந்ததாக போலீஸ் அதிகாரி தன்னிடம் கூறியதாகவும், இந்த வழக்கில் தனக்கு இரண்டு ஆப்சன்கள் இருப்பதாகவும், ஒன்று வழக்கு முடியும் வரை குழந்தையை திருப்பி கொடுத்துவிட வேண்டும் என்பது என்றும், இன்னொன்று ஸ்டேட்மெண்ட் ஒன்றை கொடுத்துவிட்டு குழந்தையை அவர்களிடம் காண்பித்தால் போதும்' என்றும் கூறினார்.

வனிதாவை ரேஷ்மா கட்டிப்பிடித்து ஆறுதல் கூறுவதுடன் இந்த புரமோ முடிவடைகிறது. டி.ஆர்.பியை அதிகரிக்க அதிகபட்சமாக என்னவெல்லாம் செய்ய முடியுமோ அதனை பிக்பாஸ் குழுவினர் செய்து வருவதால் ஒவ்வொரு நாளும் விறுவிறுப்புடன் சென்று கொண்டிருக்கின்றது பிக்பாஸ் நிகழ்ச்சி.

More News

ஆணவக்கொலைக்கு எதிராக பொங்கிய இயக்குனர் பா.ரஞ்சித்

தூத்துகுடி மாவட்டம் விளாத்திகுளத்தில் சோலைராஜ் என்பவரும் ஜோதி என்ற பெண்ணும் சமீபத்தில் காதல் திருமணம் செய்து கொண்டனர். இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள்

பிக்பாஸ் புரமோவுக்கு '96' பின்னணி இசை ஏன்?

பிக்பாஸ் நிகழ்ச்சியை விட அதன் புரமோவை சுவாரஸ்யமாக அமைத்து வரும் பிக்பாஸ் நிர்வாகத்தினர் இன்று வெளியிட்டுள்ள இரண்டாவது புரமோவிற்கு பின்னணி இசையாக விஜய்சேதுபதி-த்ரிஷா நடித்த '96' படத்தின் பின்னணி இசையை

அஜித் படத்துடன் மோதும் விக்ராந்த் படம்

அஜித் நடித்த 'நேர் கொண்ட பார்வை' திரைப்படம் ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் ஆகஸ்ட் 9ஆம் தேதி விக்ராந்த் நடித்த 'பக்ரீத்' திரைப்படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது

வேலூர் மக்களவை தொகுதி தேர்தல் தேதி அறிவிப்பு

மக்களவை தேர்தல் சமீபத்தில் நடந்தபோது தமிழகத்தில் உள்ள வேலூர் தொகுதியில் மட்டும் தேர்தலை திடீரென நிறுத்த தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. வேலூர் தொகுதியின் திமுக வேட்பாளரான கதிர் ஆனந்த் அவர்களுக்கு

டிடிவி தினகரன் கட்சியின் கொள்கை பரப்பு செயலாளரான தமிழ் நடிகை

டிடிவி தினகரனின் அமமுகவில் இருந்து ஒவ்வொருவராக விலகி திமுக, அதிமுக கட்சிகளில் தஞ்சம் அடைந்து வருகின்றனர். சமீபத்தில் இக்கட்சியின் கொள்கை பரப்பு செயலாளராக