பிக்பாஸ் தமிழ் டைட்டில் வின்னருக்கு இரண்டாவது குழந்தை.. ரசிகர்கள் வாழ்த்து..!
Send us your feedback to audioarticles@vaarta.com
பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் டைட்டில் வின்னருக்கு இரண்டாவது குழந்தை பிறந்துள்ளதை அடுத்து ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
கடந்த 2020 ஆம் ஆண்டு பிக் பாஸ் தமிழ் சீசன் 4 நிகழ்ச்சி நடந்தது என்பதும் இதில் போட்டியாளராக கலந்து கொண்ட நடிகர் ஆரி டைட்டில் பட்டம் என்றார் என்பது தெரிந்ததே.
அதேபோல் தமிழ் திரை உலகில் பல படங்கள் நடித்த ஆரி தற்போது மூன்று படங்களில் நடித்து வருகிறார் என்பதும் அந்த படங்கள் அடுத்தடுத்து ரிலீஸ் ஆகும் நிலையில் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் நடிகர் ஆரி கடந்த 2015 ஆம் ஆண்டு நதியா என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில் இந்த தம்பதிக்கு ஏற்கனவே ரியா என்ற ஒரு மகள் உள்ளார். இந்த நிலையில் தற்போது அவருக்கு இரண்டாவது ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதனை அவர் தனது சமூக வலைத்தளத்தில், ‘ஒரு குட்டி இளவரசன்க்கு அப்பா ஆகியுள்ளேன்’ என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ள நிலையில் ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
Happy morning to all
— Aari Arujunan (@Aariarujunan) July 24, 2023
After waiting for long 9 months, I’m finally relaxed and happy to become a proud APPA of an little prince ❤️
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments