ஹன்சிகா படத்தில் வில்லனாகும் பிக்பாஸ் தமிழ் டைட்டில் வின்னர்: இயக்குனர் யார் தெரியுமா?

  • IndiaGlitz, [Sunday,June 12 2022]

பிரபல நடிகை ஹன்சிகா முக்கிய வேடத்தில் நடிக்கும் அடுத்த திரைப்படத்தில் பிக்பாஸ் டைட்டில் வின்னர் வில்லனாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன.

நடிகை ஹன்சிகா நடித்த ’மஹா’ உள்பட ஒரு சில திரைப்படங்கள் விரைவில் வெளியாக தயாராக உள்ளது என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் நடிகை ஹன்சிகா முக்கிய வேடத்தில் நடிக்கும் திரைப்படம் ஒன்றின் தகவல் வெளியாகி உள்ளது.

நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கேரக்டரில் ஹன்சிகா நடிக்கும் இந்த படத்தில் பிக்பாஸ் தமிழ் டைட்டில் வின்னர் ஆரி வில்லனாக நடிக்க இருப்பதாகவும் மேலும் ஒரு முக்கிய வேடத்தில் ஜனனி துர்கா நடிக்கவிருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது தொடங்கி நடைபெற்று வருவதாகவும், இந்த படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

ஆர்யா நடித்த ’கலாபக் காதலன்’ என்ற திரைப்படத்தை கடந்த 2006ஆம் ஆண்டு இயக்கிய இகோர் என்பவர்தான் இந்த படத்தை இயக்கி வருவதாகவும், இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னை, மதுரை, பொள்ளாச்சி உள்பட ஒருசில இடங்களில் நடத்த திட்டமிடப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.