சினேகனை வார்த்தைகளால் புரட்டி எடுத்த டிரிகர் சக்தி
Send us your feedback to audioarticles@vaarta.com
பிக்பாஸ் பங்கேற்பாளர்கள் அனைவருமே சினேகன் மீது ஆரம்பத்தில் இருந்தே ஒருவித மரியாதை கலந்த ஒரு அன்பு வைத்திருந்தனர். அவர் ஒரு கவிஞர் என்பதாலும் சீனியர் என்பதாலும், எந்த பிரச்சனை வந்தாலும் அதை தீர்க்க முதல் ஆளாக முன்வந்ததாலும் அந்த மரியாதை இருந்திருக்கலாம்
ஆனால் ஆரம்பத்தில் இருந்தே அவர் ஒரு தந்திரக்காரர், இந்த விளையாட்டில் வெற்றி பெற அவர் நகர்த்தும் காய்கள் தான் அன்பு, பாசம், கட்டிப்பிடி வைத்தியம் என்பதை ஆரம்பத்தில் இருந்தே சில பார்வையாளர்கள் கணித்திருந்தனர்
இந்த நிலையில் சற்றுமுன் வெளியாகியுள்ள புரமோ வீடியோவில் சக்தி, சினேகனிடம் நேருக்கு நேர் இதை கூறிவிட்டார். இந்த வீட்டில் இருந்து வெளியே சென்றவர்கள் எல்லோருமே உங்களுடைய கட்டுப்பாட்டிற்குள் இருந்தார்கள். அதுதான் உங்களுடைய தந்திரமாக நான் நினைக்கின்றேன். முதல் நான்கு வாரங்கள் நான் உங்களுடன் பழகியிருக்கேன். அதுவரைக்கும் உங்கள் தந்திரத்தை நான் பார்க்கவில்லை' என்று கூறினார். அதற்கு சினேகன், 'நான் நானாக இருந்திருக்கேன், அது உங்களுக்கு தவறாக தெரிஞ்சிருக்கு' என்று பதில் கூற அதற்கு சக்தி, 'இதுதான் உங்கள் கேம் என்று நான் எண்ணுகிறேன்' என்று கூறினார்.
'இப்ப நீங்க சொன்னதை கேட்டு எனக்கு எந்தவித குற்ற உணர்வும் வரவில்லை என்று சினேகன் கூற, 'அதெப்படி வரும், கேம் என்றால் கன்பர்மா குற்ற உணர்வு வராது' என்று முகத்தில் அறைந்தால் போல் சக்தி கூறியதால் சினேகன் அதிர்ச்சியடைந்தார். எனவே இன்றைய நிகழ்ச்சியில் சக்தி-சினேகன் இடையே ஒரு சொற்போரை எதிர்பார்க்கலாம்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Contact at support@indiaglitz.com