செய்யறதையும் செஞ்சிட்டு சாரியா கேட்குற? கவினை எகிறிய மீரா

பிக்பாஸ் வீட்டில் ஏற்படும் பல பிரச்சனைகளுக்கு காரணமானவரான மீரா மிதுன், ஒவ்வொரு நாளும் ஒருவரை குறிவைத்து பிரச்சனையை இழுத்து அன்று முழுவதும் அனைவரும் தன்னைப்பற்றியே பேசும் வகையில் பார்த்து கொள்கிறார். அந்த வகையில் இன்று மீராவிடம் சிக்கியவர் கவின்.

இன்று கொடுக்கப்பட்ட 'டிக் டிக் டிக்' என்ற டாஸ்க்கை மீராவும் சாண்டியும் விளையாடினர். இந்த டாஸ்க் விளையாடிய விதம் குறித்து கவின் ஒரு குறையை கூற உடனே மீரா, அதெப்பாடி எல்லாரும் ஒண்ணா சேர்ந்து என் சைடுலதான் தப்பு இருக்கும்ன்னு கணிக்கிறிங்க' என்று கோபமாக கேட்க, நான் உன்னை புண்படுத்த வேண்டும் என்று கூறவில்லை, சிரித்து கொண்டே விளையாட்டிற்குத்தான் கூறினேன் சாரி' என்று கூறி இந்த பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்க முயன்றார்.

ஆனால் சின்ன பிரச்சனையை பூதாகரமாக ஆக்குவதையே தொழிலாக கொண்ட மீரா, 'ஏதாவது சொல்லிட்டு சாரி கேட்டால் சரியா? ஹர்ட் ஆனது ஹர்ட் ஆனதுதான்' என்று மீரா கூற, கவினின் முகம் இதனால் வாடியது. இந்த பிரச்சனையை வைத்தே இன்று கிட்டத்தட்ட பாதிநாள் ஓட்டிவிடுவார்கள் என்று தெரிகிறது.