நூல் விட்டே நாமினேஷன் ஃப்ரீ பாஸை பெற்ற பெண்கள் அணி.. வழக்கம் போல் சொதப்பிய ஆண்கள்..!

  • IndiaGlitz, [Friday,October 25 2024]

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில் இன்று 19வது நாளுக்கான ப்ரோமோ வீடியோ சற்றுமுன் வெளியாகியுள்ளது

இந்த வீடியோவில் நாமினேஷன் ஃப்ரீ பாஸ் டாஸ்க் வைக்கப்படும் நிலையில், நூலை பேலன்ஸ் செய்து, நூல் மேல் உள்ள பந்தை அதற்கு நேராக உள்ள பெட்டியில் போட வேண்டும். அவ்வாறு செய்தால் அந்த டீமுக்கு புள்ளிகள் கிடைக்கும் என்று பிக் பாஸ் அறிவிக்கிறார்.

நூல் தவறி வந்து கீழே விழுந்தால் புள்ளிகள் கிடையாது என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் ஆண்கள் மற்றும் பெண்கள் அணி நூல் விடும் போட்டியை விளையாட தொடங்குகின்றனர்.

ஆண்கள் அணியில் சத்யா, முத்துக்குமரன், ரஞ்சித் உள்ளிட்டோரும், பெண்கள் அணியில் பவித்ரா ஜனனி, ஜாக்லின் உள்ளிட்டவர் விளையாடிய நிலையில் இதிலும் பெண்கள் அணியை வெற்றி பெற்றுள்ளதாக பிக் பாஸ் அறிவிக்கிறார். இதனை அடுத்து பெண்கள் அணி நாமினேஷன் ஃப்ரீ பாஸை தக்க வைத்து கொண்டு உள்ளதால் இந்த வாரமும் நாமினேஷனான பெண்களில் ஒருவர் அதிலிருந்து தப்பித்துக் கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து டாஸ்க்குகளில் பெண்கள் அணி வெற்றி பெற்றும், ஆண்கள் அணி சொதப்பியும் வரும் நிலையில் வைல்ட் கார்டில் வரும் ஆண் போட்டியாளர்கள் தான் இனி அந்த அணியை காப்பாற்ற முடியும் போல் தெரிகிறது என கமெண்ட்கள் குவிந்து வருகிறது.

More News

கேம்பிரிட்ஜ் பல்கலையில் படிக்க விருப்பப்படும் இளைஞர்.. ஜியோ ஹாட்ஸ்டார் டொமைன் உதவுமா?

ஜியோ மற்றும் டிஸ்னி ஹாட்ஸ்டார் அதிகாரப்பூர்வமாக இணைந்துள்ள நிலையில், இதை முன்கூட்டியே கணித்த டெக் வல்லுனர் ஒருவர் ஜியோஹாட்ஸ்டார் டொமைனை வாங்கியிருப்பதாகவும்,

சிம்பு - அஸ்வத் மாரிமுத்து படத்தில் 'கோட்' நாயகியா? இயக்குனர் அளித்த விளக்கம்..!

சிம்பு நடிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் உருவாக இருக்கும் திரைப்படத்தில் 'கோட்' படத்தின் நாயகி நாயகியாக நடிக்க போவதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளியாகி

இதுபோன்றதொரு ஊரை தமிழ்த் திரைப்படங்களில் பார்த்ததில்லை. சுரேஷ் காமாட்சி வாழ்த்து..!

இயக்குனர் மீரா கதிரவன் இயக்கும் அடுத்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ள நிலையில் இந்த படத்தில் உள்ள மனிதர்கள் மற்றும் ஊரை இதுவரை நான் திரைப்படங்களை

லோகேஷ் கனகராஜின் 10 நிமிட LCU குறும்படம்.. ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ்..!

ஒரு படத்தில் உள்ள கேரக்டரை இன்னொரு படத்திற்கும் கொண்டு செல்வது மிகச்சில  இயக்குனர்களுக்கு மட்டுமே கைவந்த கலை என்ற நிலையில் லோகேஷ் கனகராஜ் தன்னுடைய

'குட் பேட் அக்லி' படத்தின் வியாபாரம்.. சுரேஷ் சந்திரா அறிவித்த புதிய தகவல்..!

அஜித் நடித்து வரும் "குட் பேட் அக்லி" படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இந்த படத்தின் முக்கிய வியாபார தகவலை அஜித்தின் மேனேஜர் சுரேஷ் சந்திரா தனது சமூக வலைதளத்தில்