நாமினேட் ஆன நபரை காப்பாற்றும் டாஸ்க்.. இதிலும் கோட்டை விட்ட ஆண்கள் அணி..!

  • IndiaGlitz, [Friday,October 18 2024]

டாஸ்க்கில் வெற்றி பெற்றால் நாமினேட் ஆன நபரை காப்பாற்ற முடியும் என்ற நிலையில், இந்த டாஸ்க்கிலும் ஆண்கள் அணி தோல்வி அடைந்த நிலையில், பெண்கள் அணியினர் வெற்றியின் உற்சாகத்தில் இருப்பது இன்றைய முதல் ப்ரோமோ வீடியோவில் உள்ள காட்சிகளில் இருந்து தெரிய வருகிறது.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி 12வது நாளாக இன்று ஒளிபரப்பாக இருக்கும் நிலையில், இன்றைய முதல் புரோமோவில் ஞாபகம் வருதே, ஞாபகம் வருதே என்ற டாஸ்க் வைக்கப்படுகிறது.

ஒவ்வொரு வீட்டிலும் இருந்து மூன்று நபர்கள் இந்த டாஸ்க் விளையாடலாம். மொத்தம் 15 பொருட்கள் லிஸ்டில் இருக்கும். அந்த 15 பொருட்களை நன்றாக ஞாபகம் வைத்துக் கொண்டு, ஆக்டிவிட்டி ஏரியாவுக்கு வந்து, அதே ஆர்டரில் அந்த பொருட்களை ஞாபகப்படுத்தி அடுக்கி வைக்க வேண்டும்.

இந்த டாஸ்க் முடிவடைந்த நிலையில், ஆண்கள் அணி தோல்வியடைந்தது, பெண்கள் அணி வெற்றி பெற்றதாக பிக் பாஸ் அறிவித்தார். இதைத் தொடர்ந்து, பெண்கள் அணி உற்சாகத்தில் துள்ளி குதித்தனர். மேலும், பெண்கள் அணியின் நாமினேட் ஆன ஒருவரை காப்பாற்ற முடியும் என்று பிக் பாஸ் அறிவித்ததால், ஆண்கள் அணியினர் சோகமடைந்தனர்.

More News

சூர்யா- ஆர்ஜே பாலாஜி படத்தின் நாயகி இவரா? என்ன டைட்டில் தெரியுமா?

சூர்யா நடிப்பில் ஆர். ஜே. பாலாஜி இயக்கத்தில் ஒரு திரைப்படம் உருவாக இருப்பதாக ட்ரீம் வாரியர்ஸ் நிறுவனம் சமீபத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்த நிலையில், இந்த படத்தின் நாயகி மற்றும் டைட்டில் குறித்த தகவல் கசிந்துள்ளது.

பின்னுக்கு தள்ளப்பட்ட விஜய் டிவி சீரியல்கள்.. என்ட்ரி ஆன ஜீடிவி சீரியல்... இந்த வார டிஆர்பி ரேட்டிங்..!

தமிழ் சீரியல்களை பொருத்தவரை, சன் டிவி மற்றும் விஜய் டிவிக்கு மட்டுமே போட்டியாக இருந்த நிலையில், தற்போது டாப் 10 இடத்தில் ஜீ டிவி சீரியலும் இணைந்துள்ளது. இதனால் போட்டி அதிகமாகி உள்ளது.

நடிகை தமன்னாவிடம் 5 மணி நேரம் விசாரணை செய்த அமலாக்கத்துறை.. என்ன காரணம்?

நடிகை தமன்னாவிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் 5 மணி நேரம் விசாரணை செய்ததாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

குறி வச்சா இரை விழணும் .. 'வேட்டையன்' படத்தின் ஒரு வார வசூல் இத்தனை கோடியா?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'வேட்டையன்' திரைப்படம் கடந்த வியாழக்கிழமை வெளியான நிலையில், இந்த படத்தின் ஒரு வார வசூல் குறித்த தகவல் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

எதைக் கேட்டாலும் இல்லைங்கிற.. யாருடி நீ? கீர்த்தி சுரேஷின் 'ரிவால்வர் ரீட்டா' டிரைலர்..!

கீர்த்தி சுரேஷ் முக்கிய வேடத்தில் நடித்த "ரிவால்வர் ரீட்டா" என்ற திரைப்படத்தின் டீசர் சற்று முன் வெளியான நிலையில், இந்த டீசர் வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.