என்ன ஏதுன்னு கூப்பிட்டு கொஞ்சம் அன்பா விசாரிப்போமா? பிக்பாஸ் விஜய் சேதுபதி..!

  • IndiaGlitz, [Saturday,October 19 2024]

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில், சனி ஞாயிறு என்றாலே கூடுதல் வரவேற்பு கிடைக்கும் என்பதும், குறிப்பாக விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை சூப்பராக நடத்தி வருவதாகவும் கூறப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், இன்றைய முதல் புரமோ வீடியோ சற்றுமுன் வெளியாகி உள்ள நிலையில், அதில் விஜய் சேதுபதி பேசும் காட்சிகள் உள்ளன. ’ஆரம்பத்தில், என்னடா இப்படி விளையாடுகிறார்கள் என்று நினைத்தேன். என்ன ஏதுன்னு கூப்பிட்டு விசாரிச்சோம். ஆனா இப்போ, என்னடா இப்படி எல்லாம் விளையாடுறாங்களா என்று நினைக்க தோன்றுகிறது.

இங்கே இருந்தவங்க, இங்கே வந்துருக்காங்க. ஆனா இன்னும் இவ்வளவு தூரம் போகணும். இன்று இரவு அவர்களை கூப்பிட்டு என்ன ஏதுன்னு கொஞ்சம் அன்பா விசாரிப்போமா என்று விஜய் சேதுபதி கூறுவதுடன், இன்றைய புரமோ வீடியோ முடிவுக்கு வருகிறது.

மொத்தத்தில், இந்த வாரம் நடந்த கலாட்டாக்கள் குறித்தும், சண்டை சச்சரவு குறித்தும், விஜய் சேதுபதி பிக்பாஸ் போட்டியாளர்களிடம் தனது பாணியில் விசாரிப்பார் என்று எதிர்பார்க்கப்படுவதால், இன்றைய நிகழ்ச்சி சுவாரஸ்யமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.