இந்த வார நாமினேஷன்.. சிக்கிய 4 பெண் போட்டியாளர்கள்.. யார் வெளியேற வாய்ப்பு?

  • IndiaGlitz, [Monday,October 21 2024]

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இன்று 15வது நாளாக ஒளிபரப்பாக இருக்கும் நிலையில், ஒவ்வொரு வாரமும் அன்றைய எபிசோடின் எதிர்பார்ப்பை அதிகரிக்கும் வகையில் ப்ரோமோ வீடியோக்கள் வெளியாகி வருகின்றன என்பதை பார்த்து வருகிறோம்.

அந்த வகையில், இன்று திங்கள்கிழமை என்பதால் நாமினேஷன் பற்றி ப்ரோமோ ஒன்று வெளியாகியுள்ளது. இந்த ப்ரோமோ வீடியோவில், இந்த வாரம் எவரை வேண்டுமானாலும் நாமினேஷன் செய்யலாம் என்று பிக் பாஸ் கூறியவுடன், ஜாக்லினை விஜே விஷால், சத்யா நாமினேஷன் செய்கின்றனர். சௌந்தர்யாவை ஆர்ஜே ஆனந்த் நாமினேஷன் செய்து அவர் டீமுக்காக எதுவும் யோசிக்கவில்லை என்று சொல்கின்றார்.

அன்ஷிதாவை சத்யா மற்றும் ஜாக்குலின் நாமினேஷன் செய்கின்றனர். காரணமாக சுவாரஸ்யம் ரொம்ப கம்மியாக இருப்பதாக கூறுகின்றனர். சத்யாவை சுனிதா மற்றும் அன்ஷிதா நாமினேஷன் செய்கின்றனர். பவித்ரா ஜனனியை முத்துக்குமார் நாமினேஷன் செய்கிறார்.

மொத்தத்தில் ஜாக்குலின், அன்ஷிதா, செளந்தர்யா, பவித்ரா என 4 பெண் போட்டியாளர்களும், சத்யா என்ற ஒரே ஆண் போட்டியாளராக நாமினேஷனில் சிக்கியுள்ளனர். இந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை எலிமினேஷனில் யார் வெளியேறுவார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

கடந்த வாரத்தில் எலிமினேஷனில் நூலிழையில் தப்பித்த ஜாக்குலின், இந்த வாரம் வெளியேறுவாரா அல்லது திறமையாக விளையாடி தன்னை காப்பாற்றிக் கொள்வாரா என்பதையும் பொறுத்திருந்து பார்ப்போம்.