இப்பதான் லவ் மூட் ஸ்டார் ஆச்சு, அதற்குள் எலிமினேஷனா? இந்த வாரம் வெளியேறும் போட்டியாளர்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
விஜய் டிவியில் பிக் பாஸ் நிகழ்ச்சி விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில், ஒவ்வொரு வாரமும் சனி, ஞாயிறு விஜய் சேதுபதி எபிசோடு என்பதால் கூடுதல் விறுவிறுப்பாக இருக்கும்.
அது மட்டும் இன்றி, ஞாயிற்றுக்கிழமை ஒரு போட்டியாளர் எலிமினேஷன் செய்யப்படுவார் என்பதால், ஒவ்வொரு வாரமும் எலிமினேஷன் செய்யப்படுவது யார் என்ற எதிர்பார்ப்பும் பார்வையாளர்களுக்கு இருக்கும். அந்த வகையில், இந்த வாரம் எலிமினேஷன் செய்யப்படும் போட்டியாளர்கள் குறித்த தகவல் தற்போது வெளியாகி உள்ளன.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் இதுவரை ரவீந்தர், அர்னவ், தர்ஷா, சுனிதா, ரியா, வர்ஷினி, சிவா ஆகியோர் எலிமினேஷன் செய்யப்பட்டு இருக்கும் நிலையில், இந்த வாரம் நாமினேஷன் செய்யப்பட்டவர்களில் தர்ஷிகா, ஆனந்தி உள்பட ஒரு சிலர் குறைந்த வாக்குகள் பெற்று இருப்பதாக கூறப்பட்டது.
இந்த நிலையில், தற்போது வந்துள்ள தகவலின் படி, தர்ஷிகா இந்த வாரம் வெளியேற்றப்பட்டதாக கூறப்படுவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இப்போதுதான் தர்ஷிகாவுக்கு விஜே விஷால் மீது லவ் மூட் ஸ்டார்ட் ஆன நிலையில், தற்போது அவர் வெளியேறிருப்பதாக கூறப்படுவது பார்வையாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments