தர்ஷா சாபம் பலிச்சிருச்சோ.. இந்த வாரம் எலிமினேஷன் ஆன போட்டியாளர் இவர்தான்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
பிக் பாஸ் நிகழ்ச்சிகளில், கடந்த வாரத்திற்கு முந்தைய வாரம் தர்ஷா எலிமினேஷன் ஆனபோது, பெண்கள் பக்கம் பார்த்து, "என்னை சதி செய்து வெளியேற்றி விட்டீர்கள். நீங்கள் அனைவரும் ஒவ்வொருவராக வெளியேறுவீர்கள்," என்று சாபமிட்ட நிலையில், கடந்த வாரம் ஆர்.ஜே ஆனந்தி வெளியேறிய நிலையில் இந்த வாரமும் ஒரு பெண் போட்டியாளர்தான் எலிமினேஷன் ஆகி இருப்பதாக கூறப்படுகிறது.
விஜய் டிவியில் பிக் பாஸ் நிகழ்ச்சி விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. கடந்த வாரம் ஆறு போட்டியாளர்கள் வைல்டு கார்டு என்ட்ரியாக வந்தார்கள். கடந்த சீசனில் வைல்ட் கார்டு என்ட்ரி ஆக வந்த அர்ச்சனா தான் டைட்டில் வின்னர் பட்டம் பெற்றார். அதேபோல் இந்த சீசனிலும், வைல்ட் கார்டு போட்டியாளர்கள் பிக் பாஸ் நிகழ்ச்சியை விறுவிறுப்பாக கொண்டு செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இந்த நிலையில், இந்த வாரம் மொத்தம் 11 போட்டியாளர்கள் நாமினேஷன் செய்யப்பட்ட நிலையில், அவர்களில் சாச்சனாதான் எலிமினேஷன் செய்யப்பட்டதாக முதலில் தகவல் வந்தது. ஆனால் தற்போது வந்துள்ள தகவலின்படி, சுனிதா தான் குறைந்த வாக்குகள் பெற்றதால் வெளியேற்றப்பட்டுள்ளார் என்று கூறப்படுகிறது.
இரண்டு வாரங்களுக்கு முன்பு, தர்ஷா வெளியேறிய போது, சுனிதாவை கடுமையாக விமர்சனம் செய்தார் என்றும், அதுமட்டுமின்றி, பெண் போட்டியாளர்களை அனைவரையும் பார்த்து, "நீங்கள் ஒவ்வொருவராக வெளியே வருவீர்கள்" என்று சாபமிட்டார் என்பதையும் ஏற்கனவே பார்த்தோம். அந்த வகையில், கடந்த வாரம் ஆர்ஜே ஆனந்தி, இந்த வாரம் சுனிதா வெளியேறுவதை பார்க்கும் போது, தர்ஷாவின் சாபம் பலித்து விட்டதோ என்று எண்ணத்தை தோற்றுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com