இந்த வார எலிமினேஷன் இவர்தான்.. நூலிழையில் தப்பித்த தர்ஷா குப்தா..!

  • IndiaGlitz, [Saturday,October 19 2024]

விஜய் டிவியில் பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கிய இரண்டு வாரங்கள் ஆகப்போகும் நிலையில், முதலாவது வாரத்தில் ரவீந்தர் எலிமினேஷன் செய்யப்பட்டார் என்பது தெரிந்தது. இந்த நிலையில், இரண்டாவது வாரத்தில் எலிமினேஷன் செய்யப்படும் போட்டியாளர் குறித்த தகவல் தற்போது கசிந்துள்ளது.

18 போட்டியாளர்களுடன் பிரம்மாண்டமாக பிக் பாஸ் தமிழ் சீசன் 8 தொடங்கப்பட்டது என்பதையும், விஜய் சேதுபதி இந்த சீசனை தொகுத்து வழங்கி வருகிறார் என்பதையும் ஏற்கனவே பார்த்து வருகிறோம்.

மற்ற சீசன்கள் போல் இல்லாமல், இந்த சீசனில் முதல் நாளிலிருந்தே சண்டை, சச்சரவு, தந்திரங்கள் போட்டியாளர்களால் கடைபிடிக்கப்பட்டதாலும், இதனால் சீசன் விறுவிறுப்பாக சென்று கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், இந்த வாரம், ஜே விஷால், தர்ஷா குப்தா, சௌந்தர்யா, ரஞ்சித், ஜெஃப்ரி, முத்துக்குமரன், தீபக், ஜாக்குலின், அர்னவ், சாச்சனா ஆகிய பத்து போட்டியாளர்கள் நாமினேஷனில் இருந்த நிலையில், அர்னவ், தர்ஷா குப்தா ஆகிய இருவரும் மிகவும் குறைவான வாக்குகள் பெற்று டேஞ்சர் ஜோனில் இருந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், தற்போது வந்துள்ள தகவல் படி, அர்னவ் எலிமினேஷன் செய்யப்பட்டதாகவும், அவர் மிகவும் குறைவான வாக்குகள் பெற்றதாகவும், அவரை விட கொஞ்சம் அதிகம் வாக்குகள் பெற்ற தர்ஷா குப்தா நூலிழையில் தப்பித்ததாகவும் கூறப்படுகிறது. இருப்பினும், இந்த தகவலை உறுதி செய்ய நாளைய எபிசோடு ஒளிபரப்பாகும் வரை பொறுமை காப்போம்..!