இந்த வாரம் வெளியேறும் போட்டியாளர் இவரா? டபுள் எவிக்சன் உண்டா?

  • IndiaGlitz, [Saturday,December 21 2024]

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி 75 நாட்களை தாண்டி விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில், இன்னும் ஒரு மாதத்தில் இந்த நிகழ்ச்சி முடிவடைய இருப்பதால், இனி வரும் நாட்கள் சுவாரஸ்யமாகவும், பரபரப்பாகவும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், கடந்த இரண்டு வாரங்களாக டபுள் எவிக்சன் செய்யப்பட்டு இரண்டு போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்ட நிலையில், இந்த வாரமும் இரண்டு போட்டியாளர்கள் வெளியேறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அந்த வகையில் இந்த வாரம் நாமினேஷன் செய்யப்பட்டவர்களில் ரஞ்சித், ராயன் மற்றும் மஞ்சரி ஆகிய மூவரும் குறைந்த வாக்குகள் பெற்றதாக தகவல் வெளியான நிலையில், சற்றுமுன் வெளியான தகவல் படி, இந்த வாரம் ரஞ்சித் எவிக்சன் செய்யப்படுவதாக கூறப்பட்டுள்ளது. ஒருவேளை டபுள் எவிக்சன் இருந்தால், ராயன், மஞ்சரி ஆகிய இருவரில் ஒருவர் நாளை வெளியேற்றப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே கடந்த வாரம் சத்யா, தர்ஷிகா ஆகியோர்கள் எவிக்சன் செய்யப்பட்ட நிலையில், அதற்கு முந்தைய வாரம் சாச்சனா மற்றும் ஆனந்தி வெளியேற்றப்பட்டனர். அதேபோல் இந்த வாரம் டபுள் எவிக்சன் இருக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

More News

'ஜெயிலர் 2' படப்பிடிப்பு எப்போது ? முக்கிய பணியை ஆரம்பித்த நெல்சன்..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'ஜெயிலர்' திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில், இந்த படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் உருவாக இருப்பதாக செய்திகள் வெளியாகி கொண்டிருந்த

படமே முடிய போகுது.. 'விடாமுயற்சி' திரைப்படத்தில் திடீரென இணைந்த டிவி பிரபலம்..!

அஜித் நடித்து வரும் 'விடாமுயற்சி' படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிவடைந்து விட்டதாகவும், ஒரே ஒரு பாடல் காட்சி மட்டும் மீதம் இருக்கும் நிலையில், அந்த பாடல் காட்சியின்

வெற்றிக்கான சூத்திரம் எது? பணமா? ஆன்மீகமா? : யோக குரு பரம் ஸ்ரீ சூரத் என்ன சொல்கிறார்?

இந்த வீடியோவில், ஆன்மீக வளர்ச்சி மற்றும் பொருளாதார வளர்ச்சியின் இடையே உள்ள தொடர்பை பிரம்மஸ்ரீ சூரத் ஆழமாக ஆராய்ந்துள்ளார்.

பிரபல ஹீரோ படத்தில் இணைந்த எஸ்.ஜே சூர்யா, பிரியங்கா மோகன்..! 

பிரபல ஹீரோ நடிக்கும் திரைப்படத்தில் வில்லனாக எஸ் ஜே சூர்யா, நாயகியாக பிரியங்கா மோகன் நடிக்க இணைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 

தம்பிகளா.. வேணாம்டா.. செய்தியாளர் சந்திப்பில் கையெடுத்து கும்பிட்ட நடிகர் சூரி..!

சூரி நடித்த 'விடுதலை 2' திரைப்படம் இன்று வெளியாகி உள்ள நிலையில், படத்தை பார்த்த பின் தியேட்டர் வாசலில் செய்தியாளர்களை சந்தித்த சூரி, "தம்பிகளா, வேணாம்டா?"