பிக்பாஸ் தமிழ் சீசன் 8 தொடங்கும் தேதி இதுவா? எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..!

  • IndiaGlitz, [Sunday,September 22 2024]

விஜய் டிவியில் பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஏழு சீசன்கள் முடிவடைந்த நிலையில், எட்டாவது சீசன் விரைவில் ஒளிபரப்பாகும் என்று ஏற்கனவே பார்த்தோம். இந்த சீசனை விஜய் சேதுபதி தொகுத்து வழங்க இருக்கிறார் என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும், இந்த சீசனில் போட்டியாளர்களாக தயாரிப்பாளர் ரவீந்திரன் சந்திரசேகர், சீரியல் நடிகர் வினோத், பாரதி கண்ணம்மா நடிகர் அருண், நகைச்சுவை நடிகர் செந்தில், வில்லன் நடிகர் மன்சூர் அலிகான், நடிகர் ரஞ்சித், தொகுப்பாளர்கள்கள் ஜெகன் மற்றும் தீபக், செல்லம்மா சீரியல் நடிகை அன்சிதா, ஈரமான ரோஜாவே சீரியல் நடிகை பவித்ரா, பாரதி கண்ணம்மா நடிகை பரினா, நடிகை தர்ஷா குப்தா, மற்றும் மகாராஜா திரைப்படத்தில் விஜய் சேதுபதி மகளாக நடித்த சஞ்சிதா ஆகியோர் கலந்து கொள்வதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், எட்டாவது சீசன் அக்டோபர் 6ம் தேதி ஞாயிற்றுக்கிழமை தொடங்குவதாக தகவல் வந்துள்ளது. வழக்கம் போல், ஹாட்ஸ்டாரில் 24 மணி நேரமும் நிகழ்ச்சியை காணலாம். இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் ஓரிரு நாளில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

More News

த்ரிஷாவுக்கு லிப்கிஸ் கொடுத்த இளைஞர்.. இந்த ஏஐ இன்னும் என்னவெல்லாம் செய்ய போகுதோ?

நடிகை த்ரிஷாவுக்கு இளைஞர் ஒருவர் லிப் லாக் முத்தம் கொடுப்பது போன்று உருவாக்கிய ஏ.ஐ. வீடியோ இணையத்தில் பரவுவதால் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சட்ட நடவடிக்கை எடுப்பேன்: இயக்குனர் ஷங்கர் எச்சரிக்கை.. என்ன காரணம்?

இயக்குனர் ஷங்கர் தனது சமூக வலைத்தளத்தில் சட்ட நடவடிக்கை எடுப்பேன் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து அவர் தனது சமூக வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது:

அஜித்தின் 'விடாமுயற்சி', கமலின் 'தக்லைஃப்' ரிலீஸ் தேதி இதுவா?

2024 ஆம் ஆண்டு தொடங்கியதிலிருந்தே பல பிரபல நடிகர்களின் படங்கள் வெளியானது என்பதும், குறிப்பாக விஜய் நடித்த 'கோட்' விஜய் சேதுபதி நடித்த 'மகாராஜா'

'தி பாஸ்ட் அண்ட் பியூரியஸ் 7' படத்தை  மிஸ் செய்தாரா தீபிகா படுகோன்: அவரே கூறிய காரணம்..!

உலகம் முழுவதும் ரசிகர்களின் மனதில் நீங்காத இடம் பிடித்த ஹாலிவுட் திரைப்பட தொடர் "தி பாஸ்ட் அண்ட் பியூரியஸ்." 2001-ஆம் ஆண்டு முதல் பாகம் வெளியான நிலையில் இதன் அடுத்தடுத்த

ஈ.வெ.ரா, அண்ணா, எம்ஜிஆரின் அடுத்த வாரிசு விஜய்.. ரசிகர்கள் போஸ்டரால் பரபரப்பு..!

தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா மற்றும் மக்கள் திலகம் எம்ஜிஆர் ஆகியோரின் அரசியல் வாரிசு விஜய் தான் என அவரது ரசிகர்கள் திருச்சியில் போஸ்டர் ஒட்டி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.