ஏன்டா எங்க செல்லத்தை டென்ஷன் ஆக்குறீங்க.. பிக்பாஸ் செளந்தர்யா ஆர்மி ஆவேசம்..!

  • IndiaGlitz, [Thursday,October 10 2024]

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து இந்த வாரம் சௌந்தர்யா தான் வெளியேறுவார் என்று சக போட்டியாளர்கள் பலரும் கருத்து தெரிவித்த நிலையில், அனைத்து போட்டிகளையும் அழைத்து சௌந்தர்யா விளக்கம் அளிக்கிறார். அப்போது அவர் டென்ஷனாக, சமூக வலைதளத்தில் அவரது ஆதரவாளர்கள் ஏன்டா எங்க தலைவியை டென்ஷன் ஆக்குகிறீர்கள் என்று கமெண்ட்களை பதிவு செய்து வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் நாளிலிருந்து போட்டியாளர்களுக்குள் சண்டை ஏற்பட்டு வரும் நிலையில், இந்த வாரம் யார் வெளியேறுவார்கள் என்ற கணிப்பை சக போட்டியாளர்கள் தெரிவிக்க வேண்டும் என பிக் பாஸ் கூறியிருந்தார். அதன் அடிப்படையில் சௌந்தர்யாவை அதிக நபர்கள் கூறிய நிலையில், அவர் இன்னும் சரியாக பேச கூட இல்லை என்ற குற்றச்சாட்டை முன்வைத்தார்.

இந்த நிலையில் சௌந்தர்யா அனைத்து போட்டியாளர்களையும் அழைத்து ஒரு விளக்கம் அளித்தார். இந்த வாரம் யார் வெளியே போவார்கள் என்ற பேச்சு வருகிறது. அதற்காகத்தான் நான் உங்கள் அனைவரையும் அழைத்தேன் என்று ஏதோ சொல்ல ஆரம்பிக்க அதற்குள் அதை நீ தனியாக வந்து பேசி இருக்கலாமே, எதற்காக எல்லோரையும் அழைத்து பேச வேண்டும் என்று அர்னவ் கேட்க, அனைவரும் கத்தி கொண்டிருக்கும் போது, என்னால் பைத்தியக்காரி மாதிரி காத்துக் கொண்டிருக்க முடியாது. எந்த நேரத்தில் பேச வேண்டுமோ அந்த நேரத்தில் பேசுவேன் என்று கூறினார்.

இதற்கு அர்னவ் உள்பட பலரும் டென்ஷன் ஆன நிலையில், ’எல்லோரும் பேசுவது போல் எனக்கு தெளிவாக பேச தெரியாது என்று மீண்டும் சௌந்தர்யா கூற, அதுவரை அமைதியாக இருந்த சுனிதா என்னது உனக்கு சரியாக பேச தெரியாதா? என்று பதில் கொடுத்த நிலையில் மீண்டும் சௌந்தர்யா டென்ஷன் ஆனார்.

இந்த வீடியோவுக்கு ரசிகர்கள் ஏன்டா எங்க செல்லத்தை டென்ஷன் ஆக்குகிறீர்கள் என்று கமெண்ட்ஸ்களை பதிவு செய்து வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.