close
Choose your channels

டீல் கேன்சல் என அறிவித்த ஆஜே ஆனந்தி.. எங்களால் வாக்கை காப்பாத்த முடியாது: முத்துகுமார் பதிலடி.

Tuesday, October 22, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் போட்டியாளர்கள் சண்டை போட்டுக் கொள்வதும், சனி ஞாயிறு அன்று தொகுப்பாளர் விஜய் சேதுபதி அந்த சண்டை குறித்து விசாரணை செய்து வருவதும் வழக்கமான ஒன்றாக ஆகிவிட்டது.

முந்தைய சீசன்களில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் அதிகாரபூர்வமற்ற முறையில் அணி சேர்ந்து கொண்டு விளையாடும் நிலையில், இந்த சீசனில் மட்டும் அதிகாரப்பூர்வமாகவே ஆண்கள் அணி, பெண்கள் அணியினர் பிரித்து விட்டதால், மூன்றாவது அணி இல்லை என்பது மட்டும் ஒரு ஆறுதல் ஆகும்.

இந்த நிலையில் பெண்கள் அணியின் இருப்பிடத்திற்கு ஆண்களை அணியை சேர்ந்த அருண் நுழைந்து விட்டதாக குற்றம் சாட்டிய வரும் நிலையில், டீல் கேன்சல் என அதிரடியாக ஆர்ஜே ஆனந்தி அறிவிக்கிறார். "அவர்கள் ரூலை அவர்கள் மீறிவிட்டார்கள், அதனால் டீல் கேன்சல் செய்கிறோம்" என்று ஜாக்குலினும் சொல்ல, அதற்கு முத்துக்குமரன், "இவருடைய தேவைக்காகவா போனார்?" என்று கேட்கிறார்.

"எதற்காக போனார்?" என்று பெண்கள் அணி கேட்க, ’சாச்சனாவுக்கு உடல்நிலை சரியில்லை என்பதால் தான் அவரை விட்டு வரச் சென்றார்" என்று ஆண்கள் அணியினர் கூறுகின்றனர். அதற்கு நாங்கள் இல்லையா? நாங்கள் பார்த்துக் கொள்வோம் இல்ல? என்று ஆர்ஜே ஆனந்தி கூறுகிறார். ‘எங்களுடைய தேவைக்கு நாங்கள் போகவில்லை, பாயிண்ட் முடிந்து விட்டது" என்று முத்துக்குமார் பதில் அளிக்கிறார்.

இதனை அடுத்து, "அவர் தான் உள்ளே வந்திருக்கிறார், ஆகவே டீல் கேன்சல்" என ஆர்ஜே ஆனந்தி மீண்டும் உறுதியுடன் கூற, எங்களால் வாக்கை காப்பாற்ற முடியாது, அதை நீங்கள் வந்த உடனே சொல்லியிருந்தால், இவ்வளவு நேரம் நாங்கள் பேசியிருக்க வேண்டிய அவசியம் இல்லை" என்று முத்துக்குமார் பதிலடி கொடுக்கிறார். மொத்தத்தில் இந்த பிரச்சனைக்கு தீர்வு என்ன என்பது இன்றைய எபிசோடு பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment