டீல் கேன்சல் என அறிவித்த ஆஜே ஆனந்தி.. எங்களால் வாக்கை காப்பாத்த முடியாது: முத்துகுமார் பதிலடி.

  • IndiaGlitz, [Tuesday,October 22 2024]

பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் போட்டியாளர்கள் சண்டை போட்டுக் கொள்வதும், சனி ஞாயிறு அன்று தொகுப்பாளர் விஜய் சேதுபதி அந்த சண்டை குறித்து விசாரணை செய்து வருவதும் வழக்கமான ஒன்றாக ஆகிவிட்டது.

முந்தைய சீசன்களில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் அதிகாரபூர்வமற்ற முறையில் அணி சேர்ந்து கொண்டு விளையாடும் நிலையில், இந்த சீசனில் மட்டும் அதிகாரப்பூர்வமாகவே ஆண்கள் அணி, பெண்கள் அணியினர் பிரித்து விட்டதால், மூன்றாவது அணி இல்லை என்பது மட்டும் ஒரு ஆறுதல் ஆகும்.

இந்த நிலையில் பெண்கள் அணியின் இருப்பிடத்திற்கு ஆண்களை அணியை சேர்ந்த அருண் நுழைந்து விட்டதாக குற்றம் சாட்டிய வரும் நிலையில், டீல் கேன்சல் என அதிரடியாக ஆர்ஜே ஆனந்தி அறிவிக்கிறார். அவர்கள் ரூலை அவர்கள் மீறிவிட்டார்கள், அதனால் டீல் கேன்சல் செய்கிறோம் என்று ஜாக்குலினும் சொல்ல, அதற்கு முத்துக்குமரன், இவருடைய தேவைக்காகவா போனார்? என்று கேட்கிறார்.

எதற்காக போனார்? என்று பெண்கள் அணி கேட்க, ’சாச்சனாவுக்கு உடல்நிலை சரியில்லை என்பதால் தான் அவரை விட்டு வரச் சென்றார் என்று ஆண்கள் அணியினர் கூறுகின்றனர். அதற்கு நாங்கள் இல்லையா? நாங்கள் பார்த்துக் கொள்வோம் இல்ல? என்று ஆர்ஜே ஆனந்தி கூறுகிறார். ‘எங்களுடைய தேவைக்கு நாங்கள் போகவில்லை, பாயிண்ட் முடிந்து விட்டது என்று முத்துக்குமார் பதில் அளிக்கிறார்.

இதனை அடுத்து, அவர் தான் உள்ளே வந்திருக்கிறார், ஆகவே டீல் கேன்சல் என ஆர்ஜே ஆனந்தி மீண்டும் உறுதியுடன் கூற, எங்களால் வாக்கை காப்பாற்ற முடியாது, அதை நீங்கள் வந்த உடனே சொல்லியிருந்தால், இவ்வளவு நேரம் நாங்கள் பேசியிருக்க வேண்டிய அவசியம் இல்லை என்று முத்துக்குமார் பதிலடி கொடுக்கிறார். மொத்தத்தில் இந்த பிரச்சனைக்கு தீர்வு என்ன என்பது இன்றைய எபிசோடு பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

More News

சிவகார்த்திகேயனின் 'அமரன்' டிரைலர் எப்போது.. ராஜ்கமல் நிறுவனம் அறிவிப்பு..!

சிவகார்த்திகேயன் நடித்த 'அமரன்' திரைப்படம் வரும் தீபாவளி அன்று வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.

தவெக தலைவர் விஜய் வெளியிட்ட இரங்கல் செய்தி.. என்ன ஆச்சு?

தமிழக வெற்றிக் கழகத்தின் புதுச்சேரி மாநில நிர்வாகியான திரு. சரவணன் திடீரென உடல் நலக்குறைவால் மரணம் அடைந்த செய்தி  அக்கட்சியின் தொண்டர்களுக்கு பெரும் அதிர்ச்சியை

ஜெயம் ரவியின் அடுத்த படத்தில் இணைந்த 2 பிரபலங்கள்.. அதில் ஒருவர் பிக்பாஸ் பிரபலம்..!

ஜெயம் ரவியின் அடுத்த படத்தை 'டாடா' இயக்குனர் கணேஷ்பாபு இயக்க இருக்கும் நிலையில், இந்த படத்தில் 2 பிரபலங்கள் இணைய உள்ளதாகவும், அதில் ஒருவர் பிக்பாஸ் பிரபலம் என்றும் தகவல் வெளியாகி உள்ளன.

லோகேஷ் கனகராஜ் உதவி இயக்குனரா பிக்பாஸ் மாயா? எந்த படத்தில் தெரியுமா?

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான 'விக்ரம்' மற்றும் 'லியோ' ஆகிய திரைப்படங்களில் ஒரு சில காட்சிகளில் பிக்பாஸ் மாயா நடித்திருப்பார் என்பது தெரிந்தது.

இவருக்கு பதில் இவர்.. குக்கிங் ஷோவில் இருந்து விலகிய சீதா.. என்ட்ரி ஆன 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' நடிகை..!

சீரியல்களில் அவ்வப்போது இவருக்கு பதில் இவர் என கேரக்டர் மாற்றம் என்பது சர்வ சாதாரணமாக நடந்து வரும் நிலையில் தற்போது ரியாலிட்டி ஷோவிலும் இவருக்கு பதில் இவர் என்ற மாற்றம் நடந்துள்ளது