இந்த முறை ஆளும் புதுசு.. ஆட்டமும் புதுசு.. பிக்பாஸ் தமிழ் சீசன் 8 புரமோ வீடியோ..!
Send us your feedback to audioarticles@vaarta.com
பிக் பாஸ் தமிழ் எட்டாவது சீசன் விரைவில் தொடங்க இருக்கும் நிலையில் இந்த நிகழ்ச்சியின் ப்ரோமோ வீடியோ சற்றுமுன் இணையத்தில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது. முதல்முறையாக ப்ரோமோ வீடியோவில் விஜய் சேதுபதியுடன் பொதுமக்களும் இணைந்துள்ளனர் என்பதுதான் இந்த ப்ரோமோ வீடியோவின் ஸ்பெஷல் ஆகும்.
பிக் பாஸ் தமிழ் 8வது சீசனை தொகுத்து வழங்க இருக்கும் விஜய் சேதுபதி மக்களோடு மக்களாக இணைந்து அவர்களிடம் கருத்து பேசும் காட்சிகள் இந்த ப்ரோமோ வீடியோவில் உள்ளன. டாமினேட் பண்ணும் போட்டியாளர்களை சும்மா ஓட விடனும் என்றும், காய்கறிகளில் நல்லது எது கெட்டது எது என்று பார்த்தால் தெரியும், ஆனால் மனிதர்களை பார்த்தால் தெரியாது என்று காய்கறி விற்கும் பெண் வியாபாரி ஒருவர் விஜய் சேதுபதிக்கு அறிவுரை கூறுகிறார்.
கால்பந்து விளையாடும் சிறுவன் தப்பா விளையாடினால் எப்ப எந்த கார்டு கொடுக்க வேண்டும் என்று தெரியுமா? தெரியவில்லை என்றால் என்னை பார்த்து கற்றுக் கொள்ளுங்கள் என்று அறிவுரை கூறுகிறார்.
இளகின மனசெல்லாம் 12பியில் ஓகே, ஆனால் பிக்பாஸில் வேண்டாம் என்று பேருந்தில் போகும் பயணி ஒருவர் அறிவுரை கொடுக்கிறார். பஜ்ஜி சுடும் பெண் வியாபாரி ஒருவர் ஆளாளுக்கு ஒரு நியாயம் பேசுவார்கள், வாழக்காய் பஜ்ஜி போய் வழவழவென்று இருக்காமல் மொளகா பஜ்ஜி மாதிரி மாரி சும்மா சுருக்கு என்று கேட்க வேண்டும் என்று அறிவுரை கூறுகிறார்.
இறுதியில் சலூன் கடை வைத்திருக்கும் ஒருவர் வீக் எண்டில் நல்லவங்க மாதிரி பம்முவாங்க, வீக் டேய்ஸ்ல எகிறுவாங்க, தயவுசெய்து உஷாராக இருங்க என்று கூறிய பின்னர் விஜய் சேதுபதி ’இந்த முறை ஆளும் புதுசு ஆட்டமும் புதுசு’ என்று கூறுவதுடன் இந்த ப்ரோமோ முடிவுக்கு வருகிறது.
உங்க விருப்பமான show.. இன்னும் நெருக்கமா..❤️🔥ஏன்னா, இந்த வாட்டி "ஆளும் புதுசு.. ஆட்டமும் புதுசு.." 🔥Bigg Boss Tamil Season 8.. விரைவில்..😎 #VJStheBBhost @VijaySethuOffl #BiggBossTamilSeason8 #BiggBossTamil #BBT #BBTamilSeason8 #பிக்பாஸ் #VijayTelevision @disneyplusHSTam pic.twitter.com/hyctRoaNuK
— Vijay Television (@vijaytelevision) September 11, 2024
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com