மில்லியன் கணக்கில் பார்வையாளர்கள்.. பில்லியன் கணக்கில் பார்வை நிமிடங்கள்.. பிக்பாஸ் தமிழ் 8 மாபெரும் வெற்றி..
Send us your feedback to audioarticles@vaarta.com
பிக்பாஸ் தமிழ் சீசன் 8 அக்டோபர் 6ஆம் தேதி பிரம்மாண்டமான 5 மணி நேர துவக்க விழாவுடன் துவங்கியது. புதிய தொகுப்பாளராக விஜய் சேதுபதி அறிமுகமானது ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்று, பரவலாக பாராட்டுகளை பெற்று வருகிறது.
8வது சீசனின் தொடக்கத்திலிருந்தே, இந்த நிகழ்ச்சி பல புதிய அம்சங்களால் நிரம்பியுள்ளது. புதிய தொகுப்பாளர், பெரிய வீடு, மற்றும் அசாத்திய ‘ஆண்கள் Vs பெண்கள்’ கருப்பொருள் என ரசிகர்களை கவர்ந்திழுத்துள்ளது.
விஜய் சேதுபதி புதிய தொகுப்பாளராக அசத்தலான தோரணையில், ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்தார். விவாதங்களை நேரடியாக சந்திப்பது, போட்டியாளர்களின் தவறுகளை நேர்மையாக விசாரிப்பது, உள்ளிட்ட விஜய் சேதுபதியின் தன்னம்பிக்கை மிக்க அணுகுமுறைக்கு பலத்த பாராட்டுகள் கிடைத்தன.
தொடக்க எபிசோடு தமிழகம் முழுவதும் 9 TVR மற்றும் சென்னையில் 13 TVR என சாதனை படைத்திருப்பது, நிகழ்ச்சிக்கு பெரிய ரசிகர்கள் வட்டம் இருப்பதை உறுதிப்படுத்தியுள்ளது. ரசிகர்கள் டிவியில் மட்டும் அல்லாமல், டிஜிட்டல் தளங்களின் வழியாகவும் பலர் இந்நிகழ்ச்சியினை கண்டுகளித்து வருகிறார்கள்.
• முதல் வாரத்தில் 32 மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்கள் தொலைக்காட்சியில் நிகழ்ச்சியை பார்த்தனர்.
• 4.4 பில்லியனுக்கும் அதிகமான நிமிடங்கள் (TV + Digital + Hotstar) நேரம் கொண்டாடப்பட்டுள்ளது.
• 162 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகள் சமூக ஊடகங்களில் பதிவு செய்யப்பட்டு இருக்கின்றனர்.
பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியினை, தினசரி இரவு 9:30 மணிக்கு உங்கள் விஜய் தொலைக்காட்சியில், 24/7 டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளத்திலும் கண்டுகளியுங்கள்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments