பிளான் ஏ, பிளான் பி இப்படி சொதப்பிட்டிங்களே.. ஆண்கள் அணியை வச்சு செய்த தர்ஷா..!
Send us your feedback to audioarticles@vaarta.com
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி முதல் நாளிலிருந்து விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. குறிப்பாக, இந்த சீசனில் ஆண்கள் அணி மற்றும் பெண்கள் அணி என பிரிக்கப்பட்டது, போட்டியாளர்களுக்கும் பார்வையாளர்களுக்கும் வித்தியாசமான அனுபவத்தை வழங்கி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
குறிப்பாக இதுவரை நடந்த டாஸ்க்குகளில், பெண்கள் அணி நல்ல மதிப்பீடுகளை பெற்று வந்த நிலையில், இன்று நடந்த ஒரு டாஸ்க்கில் ஆண்கள் அணி மீண்டும் சொதப்பியுள்ளது.
இதனையடுத்து, பிக் பாஸ் வெளியிட்ட அறிவிப்பில், நேற்று நடந்த உருட்டு டாஸ்க்கில் ஆண்கள் 8500 புள்ளிகளைச் சம்பாதித்து 12 ஆயிரத்துக்கும் அதிகமாக ஷாப்பிங் செய்ததால், "எனக்கு என்ன தோன்றுகிறதோ அதை மட்டுமே கொடுத்து அனுப்புகிறேன்; அதை மட்டுமே வைத்து இந்த வாரம் முழுவதும் சமைத்துக் கொள்ள வேண்டும்" என்று கூறியுள்ளார். இதனால் பெண்கள் அணியினர் ஆட்டம் போடுகின்றனர்.
இந்த நிலையில், ஆண்கள் அணிக்கு இந்த வாரம் சென்ற தர்ஷா, "நீங்கள் பிளான் ஏ, பிளான் பி போட்டீர்களே, ஆனால் யார் போக வேண்டும் என்பதை சரியாக கணிக்கவில்லையா? உங்களை நம்பி இந்த அணிக்கு வந்த நானும் எதுவும் சாப்பிடாமல் உட்கார்ந்து இருக்க வேண்டுமா?" என்று கேள்வி எழுப்பியுள்ளார். இதைத் தொடர்ந்து, பெண்கள் அணியினர் சந்தோஷத்தில் துள்ளி குதிக்க, இன்றைய நிகழ்ச்சியின் வீடியோ முடிவுக்கு வந்தது.
Boys planned to torture #DharshaGupta 😅 but #Dharsha started her game 🔥
— Vivek Shankar (@VivekTVK) October 15, 2024
Ava unga kitta matala, neenga dhan ava kitta matti irrukinga 🤣🤣#BiggBossTamil #BiggBossTamil8 #BiggBoss8Tamil#BiggBossTamilSeason8
pic.twitter.com/t38XFQjfti
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com