என் பெட்-ஐ உங்களுக்கு கொடுத்துடறேன்.. 4 வாரம் நாமினேஷன் பண்ணாதிங்க: பேரம் பேசிய ஜாக்குலின்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
பிக் பாஸ் நிகழ்ச்சி நேற்று 18 போட்டியாளர்களுடன் தொடங்கிய நிலையில், முதல் நாளே ஆண்கள் மற்றும் பெண்கள் தங்கும் இடத்தில் பிரச்சனை ஏற்பட்டது, ஜாக்குலின் புலம்பல் உள்பட பல நிகழ்வுகள் நடந்ததை நாம் ஏற்கனவே பார்த்தோம்.
இந்த நிலையில், சற்றுமுன் வெளியான வீடியோவில், ஜாக்குலின் சத்யாவிடம் "நான் என்னுடைய பெட்டை உங்களுக்கு கொடுத்து விடுகிறேன். அதற்கு பதிலாக நான்கு நாட்கள் என்னை நாமினேஷன் செய்யாதீர்கள்" என்று பேரம் பேசும் காட்சி உள்ளது. "எல்லாருக்கும் சேர்த்து தான் இந்த முடிவை எடுத்து உள்ளார்கள்" என்று சத்யா கூற, "இத்தனை பேருக்கு பிடிக்கும் போது நீ ஒருத்தி மட்டும் வேண்டாம்" என்று சொல்கிறாய். "நீ எந்த சைடு நிக்க வேண்டும் என்பதை நீ தான் முடிவு செய்ய வேண்டும்" என்று ரவீந்தர் கூறுகிறார்.
"வசதியான பெட்டில் படுப்பதை விட, எனக்கு வேண்டியவர்களை நாமினேட் செய்ய வேண்டும் என்று நினைக்கிறேன்" என்று ஜாக்குலின் கூறுகிறார். "அப்படி என்றால் நீங்கள் இந்த திட்டத்திற்கு உடன்படாததால், 24 மணி நேரத்தில் நீங்கள் தான் வெளியே போக வேண்டும்" என்று கூறியபோது அதற்கு ஜாக்குலின் "பரவாயில்லை" என்று இறுக்கத்துடன் கூறும் காட்சியுடன் இன்றைய ப்ரோமோ முடிவுக்கு வருகிறது.
24 மணி நேரத்தில் ஒரு போட்டியாளர் வெளியேற்றப்படுவார் என்று கூறப்படும் நிலையில், அவர் ஜாக்குலினா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். மேலும், முதல் நாளே ஜாக்குலின் சக போட்டியாளர்களிடம் வாக்குவாதம் செய்வதும், பார்வையாளர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
#Day1 #Promo2 of #BiggBossTamil
— Vijay Television (@vijaytelevision) October 7, 2024
Bigg Boss Tamil Season 8 - இன்று இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BiggBossTamilSeason8 #VJStheBBhost #VijaySethupathi #AalumPudhusuAattamumPudhusu #BiggBossTamil #BBTamilSeason8 #பிக்பாஸ் #Disneyplushotstartamil #VijayTelevision #VijayTV pic.twitter.com/L0gVpniq93
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Megha
Contact at support@indiaglitz.com
Comments