close
Choose your channels

பிக்பாஸ் தமிழ் சீசன் 8: 15 போட்டியாளர்கள் பட்டியல் லீக்? இதோ முழு விவரங்கள்..!

Friday, September 20, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சி ஏழு சீசன்கள் முடிவடைந்த நிலையில், வரும் அக்டோபர் மாதம் எட்டாவது சீசன் ஒளிபரப்பாக உள்ளது என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம்.

மேலும் கடந்த ஏழு சீசன்களையும் உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய நிலையில், எட்டாவது சீசனை மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தொகுத்து வழங்க உள்ளார் என்பதும், இது குறித்த முன்னோட்ட வீடியோக்களும் வெளியானதை பார்த்தோம்.

இந்த நிலையில், இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் போட்டியாளர்களின் பட்டியல் ஏற்கனவே கசிந்த நிலையில் தற்போது 15 போட்டியாளர்களின் தகவல் கசிந்துள்ளது. இந்த நிகழ்ச்சியில் தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகர், தொகுப்பாளர் தீபக், சீரியல் நடிகர் வினோத் 'பாரதி கண்ணம்மா' நடிகர் அருண், நகைச்சுவை நடிகர் செந்தில், வில்லன் நடிகர் மன்சூர் அலிகான், இயக்குனர்-நடிகர் ரஞ்சித் மற்றும் தொகுப்பாளர் ஜெகன் ஆகியோர் இடம் பெற உள்ளதாக கூறப்படுகிறது.

மேலும், 'செல்லமா' சீரியல் நடிகை அன்சிதா, 'ஈரமான ரோஜாவே' சீரியல் நடிகை பவித்ரா, 'பாரதி கண்ணம்மா' நடிகை பரீனா, 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தர்ஷா குப்தா, 'மகாராஜா' திரைப்படத்தில் விஜய் சேதுபதி மகளாக நடித்த சஞ்சிதா ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது.



இருப்பினும், பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கும் தேதியில் தான் உண்மையான போட்டியாளர்கள் யார் யார் என்பது தெரிய வரும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment