களை கட்டும் பிக்பாஸ் சீசன் 8.. இந்த முறை இத்தனை பிரபலங்களா?

  • IndiaGlitz, [Thursday,July 18 2024]

பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி விரைவில் தொடங்க இருப்பதாக கூறப்படும் நிலையில் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் போட்டியாளர்களின் ஆடிஷன் நடந்து கொண்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில் பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருக்கும் போட்டியாளர்கள் குறித்த தகவல் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அந்த வகையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஜோயா கலந்து கொள்ள அதிக வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது. தற்போது அவர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக இருக்கும் நிலையில் அவர் பிக் பாஸ் கலந்து கொள்ள இருப்பதாகவும், அனேகமாக அவரது காதலர் டிடிஎஃப் வாசனும் இருவரும் சேர்ந்து கலந்து கொள்ள வாய்ப்பு இருப்பதாகவும் தெரிகிறது.

அதேபோல் நடிகர் ரியாஸ்கான் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வார் என்று கூறப்படுகிறது. ஏற்கனவே ரியாஸ்கான் மகன் சாதிக், பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் என்பதும் அவருடைய மனைவி உமா ரியாஸ்கான் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நிலையில் தற்போது ரியாஸ்கான் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

மேலும் நடிகை பூனம் பாஜ்வா, குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அஸ்வின், பாடகி சுசித்ராவின் முன்னாள் கணவர் கார்த்திக் ஆகியோர் கலந்து கொள்ளவும் வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.

ஒவ்வொரு சீசனிலும் ஒரு அனுபவம் வாய்ந்த நடிகர் அல்லது நடிகை கலந்து கொள்ளும் நிலையில் இந்த சீசனில் அனேகமாக நடிகர் விஜயகுமார் கலந்து கொள்ளலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதே போல் பப்லு பிரித்விராஜ், பாடகி சுவேதா மேனன், பாடகி கல்பனா ஆகியோர் கலந்து கொள்ள வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது. மேலும் பிரபல மலையாள நடிகை அமலா ஷாஜி இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருப்பதாகவும் விஜய் டிவியின் செல்லப்பிள்ளைகளில் ஒருவர் மாகாபா ஆனந்த் கலந்து கொள்ள இருப்பதாகவும் கூறப்படுகிறது. அதைப்போல் நடிகை சோனியா அகர்வால், கிளாமர் நடிகை கிரண் ஆகியோர்களுடன் ரோபோ சங்கர் அல்லது அவரது மகள் இந்திரஜா கலந்து கொள்ள வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.

மேற்கண்ட நபர்கள் பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டாலும் இது குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு வெளி வந்தால் மட்டுமே போட்டியாளர்கள் குறித்த தகவல் உறுதி செய்யப்படும்.